Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மக்களே ரெடியா? சென்னையில் கனமழை வெளுக்கும்.. வெதர்மேன் கொடுத்த அலர்ட்

Chennai Weather : சென்னையில் 2025 செப்டம்பர் 19ஆம் தேதியான இன்று கனமழை வெளுக்கும் என வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த இரண்டு நாட்களை போல இது ஒரு பெரிய மழையாக இருக்காது என்றும் இதனால் சென்னையின் ஒருசில இடங்களில் மிதமான மழை கூட பெய்யலாம் எனவும் அவர் தனது எக்ஸ தளத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

மக்களே ரெடியா? சென்னையில் கனமழை வெளுக்கும்.. வெதர்மேன் கொடுத்த அலர்ட்
வெதர்மேன்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 19 Sep 2025 18:40 PM IST

சென்னை, செப்டம்பர் 19 : சென்னையில் 2025 செப்டம்பர் 19ஆம் தேதியா இன்றிரவு பல இடங்களில் மழை (Chennai Weather) பெய்ய இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இப்போது மழை மேகங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில், கனமழை கொட்டும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மாலை தொடங்கி இரவு முழுவதும கனமழை கொட்டி வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது. சென்னையிலும் கூட, கடந்த இரு தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. அதிலும், இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், 2025 செப்டம்பர் 19ஆம் தேதியான இன்று இரவு சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ரெடியா சென்னை. இடியுடன் கூடிய மழை மேகங்கள் ஆவடியை நெருங்கியுள்ளது. சென்னையின் பிற பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த இரண்டு நாட்களை போல இது ஒரு பெரிய மழையாக இருக்காது. இதனால், சென்னையில் ஒருசில இடங்களில் மழை பெய்யாமல் கூட இருக்கலாம்” என்று கூறினார். முன்னதாக, அவர்  தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கடலூர், வட தமிழகப் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.

Also Read : நெல்லையில் பரபரப்பு.. இளைஞரை காரில் இழுத்துச் சென்ற எஸ்ஐ.. திக்திக் வீடியோ!

வெதர்மேன் கொடுத்த அலர்ட்

முன்னதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 2025 செப்டம்பர் 19ஆம் தேதியான இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : விழுப்புரத்தில் பதிவான 19 செ.மீ மழை.. 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

மேலும், 2025 செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை இரண்டு தினங்களுக்கு ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.