பாம்பன் பாலத்தில் அதிர்ச்சி.. திடீரென ரயிலில் இருந்து விழுந்த இளைஞர்.. நடந்தது என்ன?
Pamban Rail Bridge : ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த ரயிலில் இருந்து இளைஞர் தவறி விழுந்துள்ளார். கடலின் ஆழமான பகுதியில் இளைஞர் விழுந்ததால், சிறிய காயமின்றி உயிர் தப்பினார். கடலில் விழுந்த அவரை, மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.

ராமேஸ்வரம், செப்டம்பர் 21 : பாம்பன் பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த ரயிலில் இருந்து இளைஞர் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரயிலில் இருந்து விழுந்த இளைஞரை, மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். இததனால், சிறு காயம் கூட ஏற்படாத நிலையில், நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். தமிழ்நாட்டில் இயற்கை எழில் கொஞ்சும் கடலின் அழகைக் காண ராமேஸ்வரம் சிறந்த இடமாகும். இதனால், ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இப்படியான ராமேஸ்வரத்தில் உள்ள பழைய ரயில்வே தண்டவாளத்திற்கு பதிலாக புதிய அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை 2025 ஏப்ரல் 6ஆம் தேதி ராமநவமி அன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகளே ஈர்ப்பதோடு, பொறியியல் திறமையின் சிறப்பையும் பிரதிபலிக்கும் சின்னமாக ராமேஸ்வரம் பாம்பன் பாலம் உள்ளது. இந்த பாலம் கடலுக்கு நடுவில் பிரம்மாண்டமாக இருக்கும். சுமார் 2.3 கிலோ மீட்டர் கொண்ட இந்த பாலம், இந்தியாவின் மிக நீளமான பாலமாக திகழ்கிறது. இந்த பாலத்தில் தினமும் விரைவு ரயிகளும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் பயணிக்கும்போதே, கடலின் அழகைக் காண முடியும். அப்படி தான், இளைஞர் ஒருவர் ரயிலில் பயணித்தபோது, கால் இடறி விழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Also Read : எமனாக மாறிய இன்ஸ்டா காதல்.. முந்திரி தோப்பில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன்.. பகீர் பின்னணி!




திடீரென ரயிலில் இருந்து விழுந்த இளைஞர்
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளைஞர் வரதராஜன். இவர் மதுரையில் வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்ய 2025 செப்டம்பர் 20ஆம் தேதியான நேற்று காலை மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளார். அங்கு ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, மதுரைக்கு மாலை 6.30 மணி ரயிலில் புறப்பட்டுள்ளார். அந்த ரயில் பாம்பன் பாலத்தில் பயணித்துக் கொண்டிருந்தது.
அப்போது, ரயிலின் படிக்கட்டு அருகில் நின்று கடலை இளைஞர் ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது, கால் இடறி வரதராஜன் கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த அவர், பாறையினை பிடித்து இரவு முழுவதும் கூச்சலிட்டிருக்கிறார். விடிய விடிய உயிர் பயத்துடன் கடலின் நடுவே இருந்துள்ளார். இந்த நிலையில், 2025 செப்டம்பர் 22ஆம் தேதியான இன்று காலை அப்பகுதியில் மீன்பிடிக்க மீனவர்கள் சென்றிருக்கிறார்.
Also Read : முருங்கை இலை சூப் மூலம் கணவர் கொலை… மனைவி, காதலன் கைது!
அப்போது, பாறைக்கு நடுவே இருந்த வரதராஜனை மீனவர்கள் மீட்டனர். பின்னர், அருகே இருந்த ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்து சென்று அவருக்கு சிகிச்சை அளித்தனர். கடலின் ஆழமான பகுதியில் வரதராஜன் விழுந்ததால், அவர் சிறிய காயமின்றி உயிர் தப்பினார். சிகிச்சை முடிந்து, வரதராஜன் மதுரைக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார்.