Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னை மக்களே அலர்ட்.. முக்கிய ரூட்டில் போக்குவரத்து மாற்றம்.. வெளியான அறிவிப்பு

Chennai Traffic Changes : சென்னையில் திருப்ழுது திருக்குடைகள் ஊர்வலத்தையொட்டி, சென்னையில் முக்கிய சாலைகளில் 2025 செப்டம்பர் 22ஆம் தேதியான நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதனை கவனித்தில் கொண்டு, வாகன ஓட்டிகளே தங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளவும்.

சென்னை மக்களே அலர்ட்..  முக்கிய ரூட்டில் போக்குவரத்து மாற்றம்..  வெளியான அறிவிப்பு
சென்னையில் போக்குவரத்து மாற்றம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 21 Sep 2025 06:37 AM IST

சென்னை, செப்டம்பர் 21 : சென்னையில் முக்கிய பகுதியில் 2025 செப்டம்பர் 22ஆம் தேதியான நாளை போக்குவரத்து மாற்றம் (Chennai Traffic Changes) செய்யப்பட்டுள்ளது. திருப்பதி திருக்குடை பாதயாத்திரை ஊர்வலத்திற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகமாகவே காணப்படும். குறிப்பாக, பீக் ஹவரில் வாகனங்கள் பல்வேறு பகுதியில் ஊர்ந்து செல்கின்றன. அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதற்கிடையில், சாலை விரிவாக்கம், மேம்பால பணிகள், மெட்ரோ பணிகள் என நடைபெறுவதால் போக்குவரத்து வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. இதற்கிடையில், முக்கிய நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2025 செப்டம்பர் 22ஆம் தேதியான நாளை திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனால், காலை 8 மணி முதல் மாலை 3 மணி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, காலை 8 மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையைக் கடக்கும் வரை என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்புச் சாலைகளில் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படாது.

Also Read : விஜய் பிரச்சாரம் பயணத்தில் மாற்றம்.. செப். 27 சென்னையில் பிரச்சாரம் இல்லை..

சென்னையில் முக்கிய ரூட்டில் போக்குவரத்து மாற்றம்


அதற்கு பதிலாக, வாகன ஓட்டிகள் ஈ.வி.ஆர் சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையைப் பயன்படுத்தலாம். ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தைக் கடக்கும் வரை, பிற்பகல் 3 மணி முதல் வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்புச் சாலைகளில் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, பேசின் பிரிட்ஜ் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலை மற்றும் ஈ.வி.ஆர் சாலை, முத்துசாமி சாலை மற்றும் ராஜாஜி சாலை வழியாக தங்கள் இலக்கை அடையலாம்.

ஊர்வலம் டெமலஸ் சாலை அடையும் போது, ​​சூளை ரவுண்டானாவிலிருந்து வரும் வாகனங்கள் சூளை ஹை ரோடு மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக திருப்பி விடப்படும். ஊர்வலம் சூளை ரவுண்டானாவை நெருங்கும்போது, ​​மசூதி பாயிண்டிலிருந்து வரும் வாகனங்கள் வேப்பேரி ஹை ரோடு நோக்கி திருப்பி விடப்படும்.

Also Read : பழங்குடியின மாணவன் மீது தலைமையாசிரியர் கொலைவெறி தாக்குதல்!

ஊர்வலம் சூளை நெடுஞ்சாலைக்குள் நுழையும் போது, ​​நாராயண குரு சாலையிலிருந்து வரும் வாகனங்கள் ஹண்டர்ஸ் சாலை சந்திப்பில் ஈ.வி.கே. சம்பத் சாலை நோக்கி திருப்பிவிடப்படும். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் அவதான பாப்பையா சாலை வரும்போது, பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.