இன்னும் சில மாதம்.. ரெடியான கிளாம்பாக்கம் ரயில் நிலையம்.. பயணிகளுக்கு சப்ரைஸ்!
Kilambakkam Railway Station : கிளாம்பாக்கம் ரயில் நிலையம் 2026 ஜனவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தற்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். 2025ஆம் ஆண்டுக்குள் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்பட்ட நிலையில், தற்போது திறப்பு தள்ளி போயுள்ளது.

சென்னை, செப்டம்பர் 24 : கிளாம்பாக்கம் ரயில் நிலையம் 2026 ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், ரயில் நிலைய பயணிகள் தற்போது 80 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும், 2026 ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கோயம்பேடு பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. இங்கிருந்து பயணிகள் வெளிமாவட்டங்கள், அண்டை மாநிலங்களுக்கு சென்று வந்தனர். ஆனால், சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. வண்டலூர் அருகே ஜிஎஸ்டி சாலையில் ரூ.400 கோடி மதிப்பில் மிகப்பெரிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டு இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்தது. சென்னையில் இருந்து கிளாம்பாக்கம் செல்ல சுமார் 1 மணி நேரமாகுவது ஆகுகிறது. அதோடு, பேருந்தில் சென்றால் இன்னும் அதிக நேரம் எடுக்கக் கூடும். அதே நேரத்தில், கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லாததால், வண்டலூரில் இருந்து இறங்கி ஆட்டோ, பேருந்தில் சென்று வருகின்றனர். இதனால், பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
Also Read : வடகிழக்கு பருவமழை.. முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தும் தமிழக அரசு!




கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது?
2024ஆம் ஆண்டு ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. வண்டலூர் ஊரப்பாக்கம் இடையே ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாகம் நடந்து வருகிறது. 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் ரயில் நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என சொல்லப்பட்டது. ஆனால், மூன்று நடைமேடைகளில் ஒன்று மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இதனால், ரயில் நிலையம் திறப்பு தள்ளி போயுள்ளது. இந்த நிலையில், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Also Read : மீண்டும் ரூ.10க்கு பாட்டில் குடிநீர் திட்டம்.. தமிழக அரசு முடிவால் மக்கள் மகிழ்ச்சி!
அதன்படி, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் ஜனவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என கூறியுள்ளனர்.