Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னை மெட்ரோ ரயிலில் பரபரப்பு… மலேசிய நாட்டு பெண்ணின் பேக்கை திருடிய HR – அதிர்ச்சி சம்பவம்

Metro Theft Case: சென்னை மெட்ரோ ரயிலில் மலேசியா நாட்டை சேர்ந்த பெண் ஒருவரின் பேக்கை தனியார் நிறுவனத்தில் எச்ஆர் ஆக பணியாற்றும் நபர் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சென்னை மெட்ரோ ரயிலில் பரபரப்பு… மலேசிய நாட்டு பெண்ணின் பேக்கை திருடிய HR – அதிர்ச்சி சம்பவம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 23 Sep 2025 17:06 PM IST

சென்னையின் மெட்ரோ (Metro) ரயிலில் பயணம் செய்த மலேசிய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் கைப்பையைத் திருடிய சம்பவம் பெரும பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனத்தில் எச்ஆர்(HR) ஆக பணியாற்றி வந்த சுனில் ராஜ் என்பவர், சென்னை மெட்ரோவில் பயணம் செய்துகொண்டிருந்த மலேசிய பெண் வைத்திருந்த பேக்கை திருடியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பேக்கை பெண் புகார் அளித்ததை அடுத்து, விசாரணை மேற்கொண்ட போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் குற்றவாளி அடையாளம் கண்டு கைது செய்தனர்.

மெட்ரோவில் பயணித்த மலேசிய பெண்ணிடம் திருட்டு

மலேசிய பெண் தனது பேக்கில் 8 சவரன் தங்க நகைகள், பாஸ்போர்ட்டாக்குமென்ட்கள் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் இருந்தாக கூறப்படுகிறது. பேக்கை இழந்த பெண் அதிர்ச்சி அடைந்த நிலையில், போலீசார் விரைவாக நடவடிக்கை எடுத்து மீட்டுக்கொடுத்ததால் அந்த பெண் நிம்மதி அடைந்ததாகத் தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க : பணம் கொடுக்கல் – வாங்கல் தகராறு.. பாரில் ஒருவர் கொலை!

இந்த சம்பவம் குறித்து சுனில் ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு தனியார் நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு பிரிவில் பணியாற்றும் ஊழியர் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து சமூக வலைதளங்களில் தங்கள் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

சென்னை மெட்ரோவில் லாஸ்ட் அண்ட் ஃபவுண்ட் அலுவலகம் திறப்பு

மெட்ரோவில் பயணிக்கும் போது பயணிகள் இழந்த பொருட்களை மீட்க  சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இதுவரை 74% பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.  இதனை மேலும் எளிமையாக்கும் வகையில், சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் லாஸ்ட் அண்ட் ஃபவுண்ட் (Lost and Found) அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

முன்னதாக, பயணிகள் தாங்கள் தொலைத்த பொருட்களை, தாங்கள் பயணம் செய்த மெட்ரோ நிலையங்களிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. இதனால் மக்கள் தங்கள் பொருட்களை பெற அதிக நேரம் பயணிக்க வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால், இப்போது சென்ட்ரல் மெட்ரோவில் அமைக்கப்பட்டுள்ள லாஸ்ட் அண்ட் ஃபவுண்ட் அலுவலகம் மூலம் பயணிகள் நேரடியாக இந்த அலுவலகத்தை அணுகி, தங்களின் இழந்த பொருட்களை எளிதாக பெற்றுக்கொள்ள முடியும்.

இதையும் படிக்க : அதிர்ந்த பெங்களூர் பஸ் ஸ்டாண்ட்… மகள் கண்முன்னே பெண் துடிதுடித்து பலி… கணவர் செய்த கொடூரம்!

சென்னை மெட்ரோ ரயில் கழகம், அனைத்து பயணிகளும் தங்களின் சொந்தப் பொருட்களை கவனமாக பாதுகாக்க வேண்டும் என்றும், பொருட்கள் இழந்தால் நிர்வாகம் பொறுப்பாகாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், பயணத்தின் போது ஏதேனும் பொருட்கள் இழந்து மீட்கப்பட்டால், அவற்றை சம்பந்தப்பட்ட மெட்ரோ நிலையத்திலோ அல்லது சென்ட்ரல் மெட்ரோவில் உள்ள இந்த புதிய அலுவலகத்திலோ பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.