நவராத்திரி கொண்டாட்டம்.. இந்த மாதிரி கனவு கண்டால் அதிர்ஷ்டம்!
தூங்கும்போது கனவு காண்பது மிகவும் பொதுவானது. இருப்பினும், கனவுகளின் அறிவியலின் படி, சில கனவுகள் எதிர்காலத்தைப் பற்றிய நல்ல அல்லது அபசகுனமான அறிகுறிகளை வழங்குகின்றன. நவராத்திரி புனித நேரம் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் கனவுகளில் சில விஷயங்களைப் பார்ப்பது மிகவும் நல்லதாகக் கருதப்படுகிறது.

நவராத்திரி இந்துக்களின் முக்கிய பண்டிகையாக திகழ்கிறது. ஷரதிய நவராத்திரி 2025, செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கிய நிலையில் அக்டோபர் 2 ஆம் தேதி முடிவடைகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும், துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களை வழிபடுகிறார்கள். இந்நாளில் பக்தர்கள் விரதம் இருந்து கொலு கண்காட்சி வைத்து வழிபட்டு பலன்களைப் பெறுகிறார்கள். இப்படியான நிலையில் நவராத்திரியின் போது வரும் சில கனவுகள் மங்களகரமானதாகக் கருதப்படுகின்றன. அவை வாழ்க்கையில் மிகவும் நன்மை பயக்கும் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அப்படியான கனவுகள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
கனவில் இவற்றைக் கண்டால் அதிர்ஷ்டம்
நவராத்திரி காலக்கட்டத்தில் கனவில் சிங்கத்தைக் காண்பது ஒரு நல்ல அறிகுறியாகக் கருதப்படுகிறது. கனவு அறிவியலின் படி, இது துர்கா தேவியின் ஆசீர்வாதம் உங்கள் மீது இருப்பதைக் காட்டுகிறது. இதனால் எதிரிகளை வெல்வது, நிதி ஆதாயம் மற்றும் தொழில் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. அதேபோல் துர்கா தேவியை கனவில் காண்பது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. அது எதிர்காலத்தில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உங்கள் கனவில் இதெல்லாம் கண்டால் விரைவில் டும் டும் டும் தான்!




நவராத்திரியின் போது உங்கள் கனவில் ஒரு பெண்ணைப் பார்ப்பது துர்கா தேவியின் ஆசீர்வாதத்தையும், செல்வம் மற்றும் செழிப்பின் வருகையையும் குறிக்கிறது. குறிப்பாக பெண் சிரித்துக் கொண்டிருந்தாலோ அல்லது சுத்தமான ஆடைகளை அணிந்தாலோ, அந்தக் கனவு மிகவும் மங்களகரமானது என சொல்லப்படுகிறது. நவராத்திரியின் போது உங்கள் கனவில் ஒரு விளக்கைக் கண்டால், அது மிகவும் நன்மை பயக்கும். அது உங்கள் நிதி நிலைமை மேம்படும் என்று அர்த்தமாகும்.
இதையும் படிங்க: முன்னோர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?
நவராத்திரியின் போது கனவில் லட்சுமி தேவியை கண்டால், நிதி சிக்கல்கள் தீர்ந்து விரைவில் நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள் என்று அர்த்தமாகும். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பூஜை செய்வது போல் கனவு கண்டால், அவர்களின் தொழில் மற்றும் வணிகம் விரைவில் செழிக்கும் என்று பொருள்படும். மேலும், ஏதேனும் வேலை நிலுவையில் இருந்தால், அந்த வேலையும் முடிவுக்கு வரும்.
பார்வதி தேவியை கனவில் பார்ப்பதும் வேலை செய்பவர்களுக்கும், வணிகத் துறையில் இருப்பவர்களுக்கும் லாபத்தின் அடையாளமாகக் கூறப்படுகிறது. துர்கா தேவியின் கோவிலைப் பார்ப்பது குபேரனின் ஆசிகள் உங்கள் மீது இருக்கும் என்பதற்கான அறிகுறியாகும், மேலும் நிதிப் பிரச்சினைகள் தீர்க்கப்படும். தாமரை மலர் லட்சுமி தேவி மற்றும் துர்கா தேவி ஆகிய இருவருடனும் தொடர்புடையது. நவராத்திரியின் போது உங்கள் கனவில் தாமரை மலரைப் பார்ப்பது நிதி ஆதாயம், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
(ஆன்மிகம் மற்றும் கனவு அறிவியலின்படி இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)