ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன்.தொழில்முறை கிரிகெட்டராக விளையாடிக்கொண்டே, கடுமையான வியாதியையும் வாழ்நாள் முழுவதும் எதிர்கொண்டு வருகிறார். பிறப்பதற்கு முன்பே மருத்துவர்களால் கண்டறியப்பட்ட சிறுநீரக நீரழிவு நோய் காரணமாக, அவரது சிறுநீரகங்கள் தற்போது 60 சதவீதம் மட்டுமே செயல்படுகின்றன. இந்த நிலை திரும்பச் சரியாகாத ஒன்றாகும்; கவனக்குறைவான வாழ்க்கை முறை இருந்தால் அது மேலும் மோசமடையக்கூடும்.