உங்க பர்ஸ் என்ன கலர்?.. பணம் செழிக்க இந்த நிறம் யூஸ் பண்ணுங்க!
பணப்பையின் நிறம் நிதி வாழ்க்கையை பாதிக்கும் என ஃபெங் சுய் கூறுகிறது. கருப்பு நிறம் நிலைத்தன்மையையும், பழுப்பு மெதுவான வளர்ச்சியையும், பச்சை செல்வத்தையும், மஞ்சள் செழிப்பையும் குறிக்கிறது. சிவப்பு விரைவான செலவை ஊக்குவிக்கலாம் என நம்பப்படுகிறது. சரியான நிற பணப்பை தேர்வு செய்வதன் மூலம் நிதி ஸ்திரத்தன்மையை அடையலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்பது நம்முடைய ஜோதிட சாஸ்திர கட்டங்களில் மட்டுமல்லாமல், நாம் பயன்படுத்தும் சில பொருட்கள், செய்யும் செயல்கள் ஆகியவற்றிலும் இருக்கும். அந்த வகையில் செல்வமாக கருதப்படும் பணம் வைக்கும்பர்ஸ் என்பது நல்ல அதிர்ஷ்டம், செழிப்பு மற்றும் நிதி ஸ்திரத்தன்மையின் சின்னமாக பார்க்கப்படுகிறது. அதனால் வயது வித்யாசம் இல்லாமல் அனைவராலும் விதவிதமான வண்ணங்கள் மற்றும் டிசைன்கள் பர்ஸ் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வண்ணங்கள் நம் வாழ்க்கையைப் பாதிப்பது போல, பர்ஸின் நிறமும் உங்கள் நிதி ஓட்டத்தை பாதிக்கும் என சொல்லப்படுகிறது. எனவே சரியான வண்ண பர்ஸைப் பயன்படுத்துவது பணத்தை ஈர்க்கும் செயலுக்கு வழிவகுக்கும். இது பணத்தைச் சேமிக்க உதவுவதுடன் மட்டுமல்லாமல், உங்கள் நிதி வாழ்க்கையை சமநிலைப்படுத்தும் எனவும் நம்பப்படுகிறது.
நாம் இந்த தொகுப்பில் எந்த நிற பர்ஸ் பயன்படுத்தினால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதைக் காணலாம். உங்கள் பணப்பையின் நிறம் உங்கள் நிதி வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரியான நிற பணப்பை உங்கள் நிதி நிலையை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், நிலையான பணப்புழக்கத்தையும் உறுதி செய்யும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Also Read: கைகொடுக்கும் நவராத்திரி.. இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்ட மழை!




உங்க பர்ஸ் என்ன கலர்?
கருப்பு: ஃபெங் சுய் சாஸ்திரப்படி, கருப்பு என்பது நீர் தொடர்பான சின்னமாகும். இது பணப்புழக்கம், நிலைத்தன்மை தொடர்ச்சியைக் குறிக்கும். நிலையான வருமானத்தை விரும்புவோருக்கும் தங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புவோருக்கும் கருப்பு பணப்பை மங்களகரமானது.
பழுப்பு: பழுப்பு நிறம் என்பது பூமியின் தனிமத்துடன் தொடர்புடையது. மெதுவான மற்றும் நிலையான நிதி வளர்ச்சியை அடைய விரும்புவோருக்கு பழுப்பு நிற பணப்பை நல்லது. இது நீண்ட காலத்திற்கு பணத்தை சேமிக்க உதவுகிறது.
பச்சை: பச்சை நிறமானது மரங்களைக் குறிக்கிறது. இந்த நிறம் செல்வம், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை ஈர்க்கிறது.
சிவப்பு: சிவப்பு நிறம் நெருப்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இந்த நிறம் செல்வத்தைத் தருகிறது. ஆனால் அது உங்களை விரைவாக பணத்தைச் செலவழிக்கச் செய்யும் என்பது குறிப்பிட வேண்டிய விஷயமாகும்.
Also Read: கண்ணாடியை கொண்டு வாஸ்து தோஷம் நீக்கலாம்.. எப்படி தெரியுமா?
மஞ்சள் அல்லது தங்க நிறம்: மஞ்சள், தங்க நிறங்கள் செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் சின்னமாகும். இந்த பர்ஸ் நிதி வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு நல்லது என்று கூறப்படுகிறது. புதிய வாய்ப்புகளை எதிர்நோக்குபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
நீலம்: நீல நிறம் தண்ணீரின் தனிமத்துடன் தொடர்புடையது. இது அமைதியையும் நிலைத்தன்மையையும் தருகிறது என்றாலும் நீல நிற பர்ஸ் பணத்தை வீணடிக்கிறது என சொல்லலாம். அதாவது நிறைய செலவு செய்யும் பழக்கம் உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.
உலோகம்: இந்த பர்ஸ் நிதி ஆதாயங்களையும் கௌரவத்தையும் தருகிறது. வணிகம் மற்றும் தொழிலில் உயர் பதவிகளை அடைய விரும்புவோர் இதனை பயன்படுத்துவது நல்லது.
(ஆன்மிக மற்றும் சாஸ்திர நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)