நடிகை சமந்தா ரூத் பிரபு, 2026ஆம் ஆண்டை புதிய மனநிலையுடன், தெளிவான தீர்மானங்களுடன் வரவேற்க தயாராக உள்ளார். சமீபத்தில் இயக்குநர் ராஜ் நிதிமோருவை திருமணம் செய்துகொண்ட சமந்தா, இனி வாழ்க்கையை மெதுவாகவும், அர்த்தமுள்ள முறையிலும் முன்னெடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் தனது புத்தாண்டு தீர்மானங்களை பகிர்ந்துள்ள சமந்தா, “நீண்ட கால ஆரோக்கியம், ஆழமான உறவுகள், உயரிய வாழ்க்கை நோக்கத்துடன் இணைந்த பயணம்” என்பதே 2026க்கான தனது முக்கிய இலக்குகள் என குறிப்பிட்டுள்ளார்.