Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Astrology: குபேரனின் அருளால் அக்டோபரில் இந்த 4 ராசிக்கு லக்!

ஜோதிட சாஸ்திரத்தில் கடவுள்களின் அனுக்கிரகம் என்பது சாதகமான விளைவுகளைக் கொடுக்கக்கூடியது. அந்த வகையில் அக்டோபர் மாதம் செல்வத்தின் அதிபதியாக திகழும் குபேரன் சில ராசிகளுக்கு தனது ஆசிகளை வழங்குவார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ரிஷபம், கடகம், துலாம், கும்பம் ஆகிய 4 ராசிகள் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும்.

Astrology: குபேரனின் அருளால் அக்டோபரில் இந்த 4 ராசிக்கு லக்!
ஜோதிடப்பலன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 26 Sep 2025 11:32 AM IST

ஜோதிடத்தில் குபேரனின் இடம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. குபேரனின் ஆசி இருந்தால் நீங்கள் நிச்சயமாக கோடீஸ்வரர் ஆவீர்கள் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்து மதத்தைப் பொறுத்தவரை செல்வத்தின் அடையாளமான குபேரன் திகழ்கிறார். இவர் 2025 அக்டோபர் மாதத்தில் சில ராசிகளுக்கு தனது ஆசிகளை வழங்குவார் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நான்கு ராசிக்காரர்களும் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் என்று கூறப்படுகிறது. விஸ்ரவன் மற்றும் ரிஷி குமாரி இலவித தேவியின் மகன் தான் குபேரன். இவர் சிவபெருமானின் அருளைப் பெற்றவர். அவரை நோக்கி 800 ஆண்டுகள் தவம் செய்து, அவருடைய அன்பையும் அருளையும் பெற்றதாக சொல்லப்படுகிறது.

செல்வத்தைப் பெருக்குவதாகவும், வற்றாத செல்வத்தைத் தருபவராகவும் குபேரர் திகழ்வதாக நம்பப்படுவதால் அனைத்து கோயில்களிலும் அவருக்கென தனியிடம் அமைக்கப்பட்டுள்ளது. வாஸ்துவைப் பொறுத்தவரை குபேரன் வட திசையின் பாதுகாவலராகக் கருதப்படுகிறார். இதனிடையே மேலே குறிப்பிட்டப்படி அந்த நான்கு ராசிகளுக்கு என்னென்ன மாதிரியான பலன்கள் பற்றிக் காணலாம்.

மாற்றம் பெறும் 4 ராசிக்காரர்கள்

  1. ரிஷபம்: குபேர பகவானின் அருளால், நிதி நன்மைகள் பல வகைகளில் ஏற்படும். இந்த ராசிக்காரர்ளுக்கு தங்கள் வேலையில் இருந்த தடைகள் நீங்கி மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு இது அற்புதமான நேரமாக அமையும். நீங்கள் செய்யும் எந்த வேலையும் விரைவில் முடிவடையும். உள்ளேயும் வெளியேயும் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.
  2. கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குபேரன் அருளால் கிடைக்கும் அனைத்தும் தங்கமாக இருக்கும். குபேரனின் அருள் மட்டுமல்லாமல் இந்த ராசிக்காரர்கள் லட்சுமி தேவியின் ஆசிகளையும் பெறுவார்கள். இது அவர்களின் தொழில் மற்றும் வேலையில் பெரும் வெற்றியைத் தரும். அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பணியிலும் வெற்றி பெறுவார்கள். சமூகத்தில் மரியாதை மற்றும் நற்பண்புகள் அதிகரிக்கும்.
  3. துலாம்: குபேர பகவானின் அருளால், துலாம் ராசிக்காரர்கள் தொடும் அனைத்தும் தங்கமாக மாறும். அவர்கள் தாங்கள் மேற்கொள்ளும் எந்த துறை செயலிலும் வெற்றி பெறுவார்கள். வேலையில் முன்னேற்றம் அடைவார்கள். வீட்டிலும், வெளியிலும் நேர்மறையான சூழல் உருவாகும். மேலும் விரைவில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் செய்பவர்கள் அதிகபட்ச லாபத்தைப் பெறுவார்கள்.
  4. கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு தங்கம் மட்டுமே முக்கியம் என்று சொல்ல வேண்டும். நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்த உடல்நலப் பிரச்சினைகள் நீங்கி, திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். செலவுகள் குறையும். எதிர்பாராத வழிகளில் பணம் வரும். ராசிக்காரர்கள் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள்.

(ஜோதிட சாஸ்திர நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)