Navratri 2025: நவராத்திரி 4ம் நாள்.. துர்க்கை வழிபாட்டு முறைகள் இதோ!
Navratri 2025 Day 4: நவராத்திரியின் நான்காம் நாள் கூஷ்மாண்டா தேவியை வழிபடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் செய்ய வேண்டிய பூஜை முறைகள், சிறந்த நேரங்கள், மற்றும் மஞ்சள் நிற ஆடை அணிவதன் முக்கியத்துவம் குறித்து நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்கா தேவியின் பல்வேறு ஒன்பது வெவ்வேறு வடிவங்களை வழிபடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. நான்காவது நாளில் செய்ய வேண்டிய பூஜை, சடங்குகள் பற்றி நாம் அறிந்துக் கொள்வோம். 2025 ஆம் ஆண்டு ஒன்பது நாள் நவராத்திரி விழாவானது கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கியது. வரும் அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமியுடன் முடிவடைகிறது. அன்றைய நாளிலேயே புகழ்பெற்ற தசரா திருவிழாவும் நடைபெறவுள்ளது. இதனிடையே நவராத்திரியின் நான்காவது நாளான செப்டம்பர் 25 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று, துர்கா தேவியின் மற்றொரு வடிவமான கூஷ்மாண்டா தேவியை வழிபடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
கூஷ்மாண்டா தேவி தனது பெயரை மூன்று வார்த்தைகளிலிருந்து அர்த்தம் பெறப்படுகிறது. அதாவது ‘கு’ என்றால் சிறியது என பொருள்படும். அதேசமயம் ‘உஷ்மா’ என்றால் அரவணைப்பு அல்லது ஆற்றல் மற்றும் அண்டா என்றால் பிரபஞ்சம் என குறிக்கப்படுகிறது. சாஸ்திரங்களின்படி, கூஷ்மாண்டா ஒரு பெண் சிங்கத்தின் மீது சவாரி செய்வதாக சித்தரிக்கப்படுகிறார், எட்டு கைகளுடன் கூடிய துர்க்கையின் வலதுபுறத்தில் தாமரை, கமண்டலம், வில் மற்றும் அம்பு ஆகியவற்றையும், இடதுபுறத்தில் அமிர்த கலசம், ஜப மாலை, கதா மற்றும் சக்கரத்தையும் ஏந்தியுள்ளார்.
Also Read: Navratri: நவராத்திரி காலம்.. கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய வாஸ்து விஷயங்கள்!




எட்டு கைகளைக் கொண்டிருப்பதால் இவள் ‘அஷ்டபுஜா தேவி’ என்று குறிப்பிடப்டுகிறாள்.கூஷ்மாண்டா தேவியை இந்நாளில் வழிபட்டால் பதட்டம், மனச்சோர்வு, பயம் ஆகியவை பக்தர்களுக்கு நீங்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. நவராத்திரியின் நான்காம் நாளில் பூஜை செய்வதற்கான சிறந்த நேரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி பிரம்ம முகூர்த்தம் வேளையான அதிகாலை 04:33 மணி முதல் 05:21 மணி வரையும், காலை 11:47 முதல் மதியம் 12:35 வரையும், விஜய முஹூர்த்தம் – 02:12 மணி முதல் 03:00 மணி வரையும் வழிபாடுகளை செய்யலாம். இதிலும் முடியாதவர்கள் மாலையில் சூரிய அஸ்தமனம் தொடங்கி இருள் சூழ்வதற்குள் வழிபடலாம் என சொல்லப்பட்டுள்ளது.
நவராத்திரியின் நான்காவது நாளில் மஞ்சள் நிற ஆடை அணிவது நாள் முழுவதும் மகிழ்ச்சி, நேர்மறை மற்றும் நம்பிக்கையின் உணர்வைத் தரும் என்று கூறப்படுகிறது. இந்நாளில் கூஷ்மாண்டா தேவிக்கு குங்குமம், சந்தனம் ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்து, முடியாதவர்கள் திலகமிட்டு மாலை அணிவிக்க வேண்டும். மேலும் பசு நெய்யால் தீபம் ஒன்றை வழிபட்டால் அதன் பலன்களே வேற லெவலில் கிடைக்கும். விரதமிருக்கும் பக்தர்கள் மாலையில் நைவேத்தியத்துடன் வழிபாட்டை நிறைவு செய்யலாம்.
Also Read: நவராத்திரி கொலு வைக்கப் போறீங்களா? இதை கொஞ்சம் கவனிங்க!
இந்த நாளில் துர்க்கை தேவியின் இந்த வடிவத்தை வழிபடுவது ஜாதகத்தில் புதனை நேர்மறையாக வைத்திருக்கும் என்று நம்பப்படுகிறது. அதேபோல் நைவேத்தியமாக கூஷ்மாண்டா தேவிக்கு மஞ்சள் நிறத்தில் குங்குமப்பூ கலந்த இனிப்புகளை வழங்குவது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.