AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

போலி நூல்கள் கொள்முதல் விவகாரம்.. வசமாக சிக்கிய அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர்.. கைது செய்த போலீசார்!

Agalvilakku Owner Mohan Arrested : தமிழகத்தில் செயல்படும் நூலகங்களில் போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அகல் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகனை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலி நூல்கள் கொள்முதல் விவகாரம்.. வசமாக சிக்கிய அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர்.. கைது செய்த போலீசார்!
அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 16 Nov 2026 19:09 PM IST

கோயம்புத்தூரில் புதிதாக திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகில் அகல்விளக்கு உள்ளிட்ட பல்வேறு பதிப்பகத்தின் நூல்கள் போலியாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, கடந்த திமுக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட இந்த நூல்கள் அனைத்தும் போலியானவை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, சென்னை அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட பல்வேறு நூலகங்களில் போலி நூல்கள் இருப்பதாக மற்றொரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், சென்னை, தென்காசி, திருப்பத்தூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட உள்ள மாவட்ட நூலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இதில், லட்சக்கணக்கான நூல்கள் போலியாக இருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர். இந்த நிலையில், பெரும்பாலான நூல்கள் அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் என்று தெரியவந்தது.

அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் அதிரடி கைது

அதன் அடிப்படையில், அகல்விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகன் என்பவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில், அகல்விளக்கு உரிமையாளர் மோகனை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அத்துடன், அகல்விளக்கு பாகத்துக்கு ரூ. 22 லட்சத்து 89 ஆயிரத்து 829 மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்துக்கு ரூ. ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 233 புத்தக கொள்முதலுக்கான தொகையை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும் படிக்க: மதுரை தனிஷ்க் கொள்ளை.. இன்ஸ்டா மீனாட்சி தாய்க்கு தொடர்பா? விசாரணையில் அதிரடி காட்டிய போலீசார்!

ஏஐ., சாட் ஜிபிடி மூலம் போலி நூல்கள் உருவாக்கம்

போலி நூல்கள் கொள்முதல் விவகாரம் தொடர்பாக திமுக மற்றும் தவெக தனித்தனியாக லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது. அதன் அடிப்படையில், போலி நூல்கள் விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை முன்னெடுத்தது. அதன் அடிப்படையிலேயே, அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகம் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், சாட் ஜிபிடி, செயற்கை நுண்ணறிவு மூலமாக போலி புத்தகங்கள் உருவாக்கப்பட்டு அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களிடமிருந்து சுமார் 1857 புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு நூலகங்களில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மார்ச் மாதம் முதல் பணப்பட்டுவாடா

இந்த நூல்களுக்கு கடந்த 2026- ஆம் ஆண்டு  மார்ச் மாதம் முதல் அரசு பணப்பட்டுவாடா செய்துள்ளது. இந்த நிலையில்தான், அகல்விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகனை  லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையில், மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகும் என்று  கூறப்படுகிறது.

மேலும் படிக்க: மது பிரியர்களுக்கு சில் நியூஸ்.. இனி டாஸ்மாக்கில் குளிர்ச்சியான பீர்.. டாஸ்மாக் முக்கிய உத்தரவு!

Follow Us