மது பிரியர்களுக்கு சில் நியூஸ்.. இனி டாஸ்மாக்கில் குளிர்ச்சியான பீர்.. டாஸ்மாக் முக்கிய உத்தரவு!
Chilled Beer At TASMAC : தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் குளிர்ச்சியான பீர் வகைகளை விற்பனை செய்வதற்கு டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான குளிர்சாதன பெட்டி கொள்முதல் செய்வதற்கான டெண்டர் விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் 4,048 டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் கோடைகாலத்தில் குளிர்ச்சியான பீர் வகைகளுக்கு தேவை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு குளிர்சாதன பெட்டிகளை வழங்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான டென்டர் புள்ளிகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் ஒவ்வொரு டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளிலும் எத்தனை குளிர்சாதன பெட்டிகள் வழங்கப்பட வேண்டும், அவற்றின் கொள்ளளவு என்ன என்பதை அந்தந்த கடைகளின் சராசரி தினசரி விற்பனையின் அடிப்படையில் தீர்மானிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் அதற்கு மேல் வருமானம் வரும் ஏ பிரிவு டாஸ்மாக் கடைகள். ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் முறை விற்பனையாகும் பி வகை கடைகள். ரூ . 5 லட்சம் முறை வருமானம் கிடைக்கும் சி பிரிவு கடைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
டாஸ்மாக்கில் குளிர்ச்சியான பீர் விற்க திட்டம்
இதில், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு கடையையும் ஆய்வு செய்து, அவற்றின் தேவைகள் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து இறுதி தேவை கணக்கிடப்பட்ட உடன் குளிர்சாதன பெட்டிகள் கொள்முதல் செய்யும் பணி விரைவில் தொடங்கும் என்று டாஸ்மாக் முதுநிலை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதன் மூலம், டாஸ்மாக் கடைகளில் பீர் வகைகளை குளிர்ச்சியாக விற்பனை செய்ய முடியும்.
மேலும் படிக்க: ரூ.100 கோடி முறைகேட்டில் புழல் சிறையில் அடைப்பு.. 3- ஆவது முறையாக உயிர் நண்பன் அன்பிலை சந்தித்த உதயநிதி.. என்ன காரணம்!
2- ஆவது முறை குளிர்ச்சியான பீர் விற்க திட்டம்
ஏற்கெனவே, டாஸ்மாக் கடைகளில் குளிர்ச்சியான பீர் வகைகளை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில், சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், 2- ஆவது முறையாக டாஸ்மாக் கடைகளில் குளிர்ச்சியான பீர் வகைகளை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நகர்ப்புறங்களில் உள்ள சுமார் 2 ஆயிரம் கடைகளுக்கு 400 லிட்டர் மற்றும் 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கப்பட்டிருந்தன.
மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
ஆனால், அவற்றில் பெரும்பாலானவை தற்போது முறையாக செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, செயல்படாத குளிர்சாதன பெட்டிகளை அடுத்தடுத்து மாற்றி புதிய குளிர்சாதனப் பெட்டிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கோடைகாலம் உள்ளிட்ட அனைத்து காலங்களிலும் மது பிரியர்கள் விரும்பும் பீர் வகைகள் குளிர்ச்சியாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மதுரை தனிஷ்க் கொள்ளை.. இன்ஸ்டா மீனாட்சி தாய்க்கு தொடர்பா? விசாரணையில் அதிரடி காட்டிய போலீசார்!