AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Asian Games 2026: ஆசிய விளையாட்டு போட்டி: மகளிர் ரீகர்வ் அணிப் பிரிவில் இந்தியாவுக்கு வரலாற்று தங்கம்

Gold Medal For India: கடைசி மூன்று அம்புகளில் தென் கொரிய வீராங்கனைகள் மூன்று 8 புள்ளிகளை மட்டுமே பெற்றனர். இதனைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய வீராங்கனைகள் 8, 9, 10 என புள்ளிகளைப் பெற்று 55-51 என்ற கணக்கில் மூன்றாவது எண்டை கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய அணி 4-2 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்று, வரலாற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

Asian Games 2026: ஆசிய விளையாட்டு போட்டி: மகளிர் ரீகர்வ் அணிப் பிரிவில் இந்தியாவுக்கு வரலாற்று தங்கம்
தங்கம் வென்ற இந்திய அணி
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 02 Oct 2026 07:45 AM IST

அக்டோபர் 2, 2026: 2026 ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் ரீகர்வ் வில்வித்தை அணிப் பிரிவில் அங்கிதா பகத், கீர்த்தி மற்றும் கும்கும் அனில் மொஹோட் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இறுதிப்போட்டியில் வலுவான தென் கொரிய அணியை வீழ்த்தி இந்தியாவுக்கு முதல் முறையாக தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

இதற்கு முன்பு ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிர் அணிப் பிரிவில் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியதே இல்லை. இந்நிலையில், காங் சேயோங், லீ யுன்ஜி மற்றும் ஓ யெஜின் ஆகியோர் இடம்பெற்ற தென் கொரிய அணியை இந்திய அணி எதிர்கொண்டது.

முதல் சுற்று முதல் மூன்றாம் சுற்று வரை:

முதல் எண்டின் தொடக்க மூன்று அம்புகளில் இந்தியா 28-26 என முன்னிலை பெற்றது. ஆனால் கீர்த்தி 7 புள்ளிகள் எடுத்ததால் கொரியா முன்னிலை பெற்றது. இருப்பினும் கும்கும் 10 புள்ளிகளைப் பெற்று இந்திய அணியை சமநிலைக்கு கொண்டு வந்தார். இதனால் முதல் எண்ட் 54-54 என முடிந்து இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றன.

இரண்டாவது எண்டில் தென் கொரியா 10, 9, 9 என 28 புள்ளிகளைப் பெற்றது. இந்தியாவுக்காக அங்கிதா 10 புள்ளிகளைப் பெற்ற நிலையில், கீர்த்தி 8 புள்ளிகளைப் பெற்றார். மீண்டும் கும்கும் 10 புள்ளிகளைப் பெற்று இந்தியாவை 28-28 என சமநிலைக்கு கொண்டு வந்தார்.

மேலும் படிக்க: ஆசிய விளையாட்டு போட்டி – ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா! – இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

அடுத்த மூன்று அம்புகளிலும் தென் கொரியா 10, 9, 9 என 28 புள்ளிகளைப் பெற்றது. இந்திய அணியில் அங்கிதா மீண்டும் 10 புள்ளிகளைப் பெற்றார். கீர்த்தி 8 புள்ளிகளைப் பெற்றாலும், கும்கும் அழுத்தமான சூழலில் மீண்டும் 10 புள்ளிகளைப் பெற்றார். இதனால் இரண்டாவது எண்ட் 56-56 என சமநிலையில் முடிந்து, இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றன.

வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய அணி:

மூன்றாவது எண்டில் கீர்த்தி முதலில் களமிறங்கி 10 புள்ளிகளைப் பெற்று மீண்டார். தொடர்ந்து அங்கிதா மற்றும் கும்கும் தலா 9 புள்ளிகளைப் பெற்றனர். இதனால் இந்தியா 28-27 என முன்னிலை பெற்றது.

மேலும் படிக்க: ஆசிய விளையாட்டு: வெண்கலம் வென்ற தமிழக வீரர்கள் – ரூ.30 லட்சம் பரிசு அறிவித்த முதல்வர்

கடைசி மூன்று அம்புகளில் தென் கொரிய வீராங்கனைகள் மூன்று 8 புள்ளிகளை மட்டுமே பெற்றனர். இதனைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய வீராங்கனைகள் 8, 9, 10 என புள்ளிகளைப் பெற்று 55-51 என்ற கணக்கில் மூன்றாவது எண்டை கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய அணி 4-2 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்று, வரலாற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

Follow Us