AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

10 அடி ஆழ கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்த பசு மாடு.. பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்!

Cow Rescued From Sewage Tank In Madurai | மதுரையில் 10 அடி அழ கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாடு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்துச் சென்ற தீயணைப்பு துறையினர் விரைவாக மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

10 அடி ஆழ கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்த பசு மாடு.. பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்!
கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாடு
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 02 Nov 2026 07:56 AM IST

மதுரை, நவம்பர் 02 : மதுரையில் (Madurai) சுமார் 10 அடி ஆழம் கொண்ட கழிவு நீர் தொட்டியில் விழுந்த பசு மாட்டை, தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு திரும்பிய பசுமாடு தவறுதலாக அந்த கழிவுநீர் தொட்டியில் விழுந்துள்ளது. இந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாடு மீட்கப்பட்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

10 அடி ஆழ கழிவு நீர் தொட்டியில் விழுந்த பசு மாடு

மதுரை மாவட்டம், அனுப்பானடி தீயணைப்பு நிலைய எல்லைக்கு உட்பட்ட ஐராவதநல்லூர் கல்லம்பல் சாலை பகுதியில் சுமார் 10 அடி ஆழம் கொண்ட கழிவு நீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டியில், அந்த பகுதியை சேர்ந்த வெள்ளையம்மாள் என்பவருக்கு சொந்தமான பசு மாடு ஒன்று தவறி விழுந்துள்ளது. மேய்ச்சலுக்கு சென்ற அந்த பசு மாடு, வீடு திரும்பிய நிலையில் தவறுதலாக தொட்டிக்குள் விழுந்துள்ளது.

இதையும் படிங்க : தி.மலையில் சாலையின் குறுக்கே வந்த சிலர்.. கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. பலத்த காயத்துடன் 35 பேருக்கு சிகிச்சை!

பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

இந்த நிலையில், பசு மாடு கழிவு நீர் தொட்டியில் விழுந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு அந்த பகுதியில் உள்ள மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர், பசுமாட்டை பத்திரமாக மீட்டனர். அதன் பிறகு பசு மாடு பத்திரமாக அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள தயார்.. எதிர்க் கட்சிகளுக்கு அதிமுக டஃப் கொடுக்கும்.. எடப்பாடி கே. பழனிசாமி!

தீயணைப்பு துறை வீரர்களுக்கு குவியும் பாராட்டு

கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாட்டை மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த தீயணைப்பு துறை வீரர்களான திருநாவுக்கரசு, சதீஷ்பாண்டி மற்றும் நிலை அலுவலர் கணேஷ் ஆகியோரை அந்த பகுதி மக்கள் பார்ராட்டியுள்ளனர்.

Follow Us