AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather Alert: ‘முரசு புயல்’ எதிரொலி.. இந்த மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை..

Tamil Nadu weather today: தொடர்ந்து, நாளை (நவ.03) நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வடக்கு தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது

Tamil Nadu Weather Alert: ‘முரசு புயல்’ எதிரொலி.. இந்த மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை..
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 02 Nov 2026 06:22 AM IST

சென்னை, நவ.02: தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அதோடு, பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘முரசு புயல்’ (Cylone Murasu) மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று தீவிரப் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த முரசு புயல் நாளை (நவ.03) ஆந்திர மாநிலம் நெல்லூர் – நர்சாபூர் இடையே பலத்த காற்றுடன் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : மலைப்பாதையில் கோர விபத்து.. 100 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த லாரி.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு:

அந்தவகையில், இன்று (நவ.02) சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

வரும் நாட்களில் மழை நிலவரம்:

தொடர்ந்து, நாளை (நவ.03) நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வடக்கு தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதனைத்தொடர்ந்து, நவ.4ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும். அதேபோல், நவ.5 மற்றும் 6ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிக்க : அரியலூர் அருகே மதுபோதையில் ஊர்க்காவல்படை வீரர் அடித்துக் கொலை.. ரோந்துப் பணியின் போது அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

பள்ளிகளுக்கு விடுமுறை வாய்ப்பு:

இதனிடையே, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்றிரவே திருவள்ளூர், சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.02) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us