AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிகாலை நிலவிய பனிமூட்டம்! திருச்சியில் 800 மீட்டராகக் குறைந்த பார்வைத்திறன் – வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

Fog And Mist Over Tamil Nadu: காற்றின் வேகம் மிகவும் குறைவாகவோ அல்லது காற்றே இல்லாத நிலையாகவோ இருந்துள்ளது. சூரிய உதயத்திற்குப் பிறகு வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியதால், காலை 8.30 மணியளவில் பார்வைத்திறன் 1,500 மீட்டராக அதிகரித்தது. இதன் மூலம் பனிமூட்டம் படிப்படியாக விலகத் தொடங்கியது.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிகாலை நிலவிய பனிமூட்டம்! திருச்சியில் 800 மீட்டராகக் குறைந்த பார்வைத்திறன் – வானிலை ஆய்வு மையம் விளக்கம்!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 31 Oct 2026 10:30 AM IST

அக்டோபர் 31, 2026: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் மற்றும் மூடுபனி நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, திருச்சி விமான நிலையத்தில் இன்று (அக்டோபர் 31) அதிகாலை நிலவிய பனிமூட்டம் காரணமாக பார்வைத்திறன் 800 மீட்டராகக் குறைந்துள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை 7 மணியளவில் பதிவான வானிலைத் தரவுகளின்படி, பனிமூட்டம் (Fog) காரணமாக பார்வைத்திறன் 800 மீட்டராகக் குறைந்திருந்தது.

அப்போது காற்றின் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் பனிப்புள்ளி வெப்பநிலை ஆகிய இரண்டும் 26 டிகிரி செல்சியஸாகப் பதிவாகின. இதனால் காற்றில் ஈரப்பதம் முழுமையாக நிறைந்திருந்தது தெரியவந்துள்ளது.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நிலவிய பனிமூட்டம்:

மேலும், காற்றின் வேகம் மிகவும் குறைவாகவோ அல்லது காற்றே இல்லாத நிலையாகவோ இருந்துள்ளது. சூரிய உதயத்திற்குப் பிறகு வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியதால், காலை 8.30 மணியளவில் பார்வைத்திறன் 1,500 மீட்டராக அதிகரித்தது. இதன் மூலம் பனிமூட்டம் படிப்படியாக விலகத் தொடங்கியது. திருச்சியைப் போலவே தமிழகத்தின் உள் மாவட்டங்களில், குறிப்பாக நீர்நிலைகளுக்கு அருகில் அமைந்துள்ள பகுதிகளிலும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் போன்ற சூழல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் ரயில் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை! பட்டாசு, பெட்ரோல் எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை!

பனிமூட்டம் உருவாக என்ன காரணம்?

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக வடக்கு மற்றும் வட உள் மாவட்டங்களில் வானம் தெளிவாகக் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் பூமியின் மேற்பரப்பில் இருந்து வெப்பம் வெளியேறி, குறைந்தபட்ச வெப்பநிலை குறைந்து வருகிறது.

அதேபோல், வங்கக்கடலில் உருவாகியுள்ள மிகத் தீவிர புயலான ‘அர்னப்’ (Arnab) நகர்வு காரணமாக காற்றின் திசையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் வடகிழக்குப் பருவமழைக்கான ஈரப்பதம் நிறைந்த காற்று குறிப்பிடத்தக்க அளவில் இந்தப் பகுதிகளுக்கு வரவில்லை. இதுவும் வானம் தெளிவாக இருப்பதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.

இத்தகைய பனிமூட்டம் பொதுவாக சில மணி நேரங்கள் மட்டுமே நீடிக்கும். சூரிய உதயத்திற்குப் பிறகு வெப்பநிலை அதிகரிக்கும்போது படிப்படியாக விலகிவிடும் என வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் படிக்க: கோவை மத்திய சிறை வளாகத்தில் போலீசாரை ஏமாற்றி தப்பியோடிய கைதி.. தொடரும் தீவிர தேடுதல் வேட்டை.. அதிர்ச்சி சம்பவம்!!

அந்தமான் தீவுகளில் கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் நிலவும் புயல் சுழற்சி காரணமாக அக்டோபர் 31ஆம் தேதியான இன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் அதிகரிக்கும் – எச்சரிக்கை!

அக்டோபர் 31ஆம் தேதியான இன்று தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசி வருகிறது. இது இன்று நண்பகல் முதல் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் அதிகரிக்கக்கூடும்.

 

Follow Us