நீட் தேர்வு முறைகேட்டை எதிர்த்து போராட்டம்.. ராகுல் காந்தியுடனான பேச்சுவார்த்தை குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சொன்ன தகவல்..
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், “போராட்டம் நடைபெற்ற பகுதி இதுபோன்ற போராட்டங்களுக்கு ஏற்ற இடம் அல்ல என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் ராகுல் காந்தியிடம் தெரிவித்தோம். அப்போது, நீட் தேர்வு மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு ஒப்புக்கொண்டால் போராட்டத்தை கைவிடுவதாக ராகுல் காந்தி முதலில் தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை 21, 2026: நீட் தேர்வு வினாத்தாள் கசிவை எதிர்த்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். செவ்வாய்க்கிழமை தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை:
இதையடுத்து, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடச் செய்ய முயற்சி மேற்கொண்டார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சமூக வலைதளத்தில் இதுகுறித்து பதிவிட்டார்.
நீட் விவகாரம் – நாடாளுமன்றத்தில் விவாதிக்க திட்டம்:
कुछ समय पहले, यह ज्ञात हुआ कि कांग्रेस पार्टी के राष्ट्रीय अध्यक्ष, श्री मल्लिकार्जुन खड़गे और उनके साथ अन्य वरिष्ठ नेता, जैसे कि श्री राहुल गांधी, श्रीमती प्रियंका गांधी इत्यादि अकस्मात ही अकबर रोड़ के समीप एक स्थान पर अपने समर्थकों के साथ धरने पर बैठ गयेहैं। सरकार ने इस वरिष्ठ…
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) July 21, 2026
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், “போராட்டம் நடைபெற்ற பகுதி இதுபோன்ற போராட்டங்களுக்கு ஏற்ற இடம் அல்ல என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் ராகுல் காந்தியிடம் தெரிவித்தோம். அப்போது, நீட் தேர்வு மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு ஒப்புக்கொண்டால் போராட்டத்தை கைவிடுவதாக ராகுல் காந்தி முதலில் தெரிவித்தார்.
இதையடுத்து, அரசின் உயர்மட்டத் தலைமைத்துடன் ஆலோசனை நடத்திய பின்னர், நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக ராகுல் காந்தியிடம் தெரிவித்தோம்.
மேலும் படிக்க: ராகுல் காந்தி- பிரியங்கா காந்தி அதிரடி கைது! டெல்லியில் பெரும் பரபரப்பு!
ராகுல் காந்தி செய்தது சரி அல்ல:
ஆனால், அதன்பின்னர் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் ராகுல் காந்தி முன்வைத்தார். இதன் மூலம் அவர் தனது கோரிக்கைகளை மாற்றிக் கொண்டுள்ளார். ஜனநாயகத்தில் ஒரு வாக்குறுதி அளித்த பிறகு அதிலிருந்து பின்வாங்குவது சரியான நடைமுறை அல்ல.
நீட் தேர்வு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ விவாதத்தை நடத்துவதற்கான நோட்டீஸை காங்கிரஸ் கட்சி இதுவரை வழங்கவில்லை” என ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.