AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
நண்பனின் மனைவியை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய நபர்.. அதிர்ச்சி சம்பவம்!

நண்பனின் மனைவியை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய நபர்.. அதிர்ச்சி சம்பவம்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Feb 2026 23:16 PM IST

Man Harassed Friend's Wife In Bengaluru | பெங்களூரில் தையல்காரர் ஒருவருடன் நண்பராக பழகி வந்த ஜஹாங்கீர் என்பவர் அந்த தையல்காரரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ பதிவு செய்து மிரட்டி வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பெங்களூரு, பிப்ரவரி 21 : கர்நாடகா (Karnataka) மாநிலம், பெங்களூரு (Bengaluru) கோவிந்தாபுரா காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பீகாரை சேர்ந்தவர் வசித்து வருகிறார். தையல்காரரான அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். அவருக்கும் பைரன குண்டே பகுதியை சேர்ந்த ஜஹாங்கீர் என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் இந்த நபருக்கு தையல் தொழில் செய்வதில் உதவியாக இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

மனைவியை பலத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய நபர்

தையல்காரருடன் நண்பரை போல பழகி வந்த ஜஹாங்கீர், 2023 ஆம் ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தையல்காரரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனை அவர் தனது ஸ்மார்ட்போனிலும் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், நடந்ததை வெளியே கூறினால், வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என்றும் அவர் மிரட்டியுள்ளார்.

இதையும் படிங்க : பிரியாணி உணவகங்களில் ரூ.70 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு… ஹதராபாத் பிரியாணி கடை விசாரணையை தொடர்ந்து அம்பலம்!

தினமும் பாலியல் வன்கொடுமை செய்து வந்த ஜஹாங்கீர்

வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியதால் அந்த தையல் காரரின் மனைவி பயந்துபோயுள்ளார். அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஜஹாங்கீர், தினமும் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதற்கிடையே 6 மாதங்களுக்கு முன்னதாக தனது மூன்றாவது மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அந்த பெண் பீகாருக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், பிப்ரவரி 10, 2026 அனறு மீண்டும் அவர் பீகாருக்கு வந்துள்ளார். அப்போது ஜஹாங்கீர் அந்த பெண்ணுடன் மீண்டும் உல்லாசமாக இருக்க முயற்சி செய்துள்ளார்.

இதையும் படிங்க : பச்சிளம் குழந்தையுடன் பொதுத்தேர்வு எழுத வந்த இளந்தாய்.. நெகிழ்ச்சிச் சம்பவம்!

அதற்கு அந்த பெண் மறுத்த நிலையில், தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் ரூ.5 லட்சம் பணம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் வீடியோவை சமூக வலைத்தளங்களி வெளியிட்டு விடுவேன் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ஜஹாங்கீர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Published on: Feb 21, 2026 02:04 PM