Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Asia Cup 2025: இந்தியாவிற்கு எதிரான சைகை.. ஹாரிஸ் ரவூஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

Haris Rauf Banned for 2 ODIs: இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹாரிஸ் ரவூப்பைப் போலவே, ஐசிசி நடத்தை விதிகளின் பிரிவு 2.21 மீறியதற்காக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. அதன்படி, சூர்யகுமார் யாதவிற்கு போட்டிக் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதமும், இரண்டு குறைபாடுப் புள்ளிகளும் விதிக்கப்பட்டன.

Asia Cup 2025: இந்தியாவிற்கு எதிரான சைகை.. ஹாரிஸ் ரவூஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!
ஹாரிஸ் ரவூஃப் - பர்ஹான் - சூர்யகுமார் யாதவ்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Nov 2025 08:30 AM IST

2025 ஆசியக் கோப்பையில் (2025 Asia Cup) இந்தியாவிற்கு எதிரான போட்டியில் சில சைகைகளை செய்த காரணத்திற்காக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப் ஐசிசியால் 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார்.  2025 ஆசிய கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த 3 போட்டிகளையும் ஐசிசியின் போட்டி நடுவர்கள் குழு விசாரித்தது. இதையடுத்து, ஐசிசி நடத்தை விதிகளின் பிரிவு 2.21 இன் கீழ் ஹாரிஸ் ரவூஃப் (Haris Rauf) தப்பு செய்தார் என நிரூபிக்கப்பட்டதால், 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. அதேநேரத்தில் சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ: இந்திய மகளிர் அணியின் அடுத்த போட்டி எப்போது..? யாருடன் விளையாடுகிறது? அட்டவணை இதோ!

ஹாரிஸ் ரவூஃப் 2 போட்டிகளில் விளையாட தடை:


கடந்த 2025 செப்டம்பர் 14ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டியின் போது முதல் சம்பவம் நடந்தது. ஹாரிஸ் ரவூஃப் தனது போட்டிக் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், இரண்டு தகுதி இழப்புப் புள்ளிகளையும் பெற்றார். மேலும், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான் சூப்பர் 6 போட்டியில், ரவூஃப் இந்திய தொடக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மாவை வார்த்தைகளால் திட்டி, அவர்களுடன் சண்டையிட முயன்றார். இது மட்டுமின்றி அதேபோட்டியில், ரவூஃப் பீல்டிங் செய்யும் போது இந்திய இராணுவத்தின் தாக்குதல் விமானம் குறித்தும் சைகைகளையும் செய்தார். இந்த முறை, இதன் காரணமாக அவருக்கு மீண்டும் போட்டிக் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இரண்டு தகுதி இழப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டன.

ஐசிசி விதிகளின்படி, 24 மாத காலத்திற்குள் 4 தகுதி இழப்பு புள்ளிகளை பெறும் ஒரு வீரருக்கு ஒரு டெஸ்ட், 2 ஒருநாள் அல்லது 2 டி20 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும். எனவே, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து ஹாரிஸ் ரவூஃப் தடை செய்யப்பட்டுள்ளார்.

பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கும் தண்டனை:

இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹாரிஸ் ரவூப்பைப் போலவே, ஐசிசி நடத்தை விதிகளின் பிரிவு 2.21 மீறியதற்காக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. அதன்படி, சூர்யகுமார் யாதவிற்கு போட்டிக் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதமும், இரண்டு குறைபாடுப் புள்ளிகளும் விதிக்கப்பட்டன. சூர்யகுமார் யாதவ் மேலும் இரண்டு குறைபாடுப் புள்ளிகளைப் பெற்றால், அவர் இதேபோன்ற இடைநீக்கத்தை எதிர்கொள்ள நேரிடும்.

ALSO READ: விரைவில் ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை.. வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் வாய்ப்பு!

அரைசதத்திற்கு பிறகு துப்பாக்கிச் சூடு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சாஹிப்சாதா ஃபர்ஹானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவருக்கு ஒரு தகுதி இழப்புப் புள்ளி மட்டும் வழங்கப்பட்டது. இதற்கிடையில், ஹாரிஸ் ரவூப் விக்கெட்டை வீழ்த்திய பிறகு ஜஸ்பிரித் பும்ரா, கைகளை உயர்த்தில் கீழே இறக்கி சைகையைச் செய்தார். இதற்காக அவருக்கும் ஒரு குறைபாடு புள்ளி வழங்கப்பட்டது.