Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Asia Cup 2025: மெயில் மூலம் எச்சரித்த பிசிசிஐ! நக்வி ஆசிய கோப்பையை வழங்குவாரா?

Mohsin Naqvi vs BCCI: இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்ற ஆசிய கோப்பையை இந்தியாவிற்கு கொண்டு வர பிசிசிஐ முயற்சித்து வருகிறது. கடந்த 2025 செப்டம்பர் 30ம் தேதி ஏசிசி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நக்வியின் நடவடிக்கைகளுக்கு பிசிசிஐ ஆட்சேபனைகளை எழுப்பியது.

Asia Cup 2025: மெயில் மூலம் எச்சரித்த பிசிசிஐ!  நக்வி ஆசிய கோப்பையை வழங்குவாரா?
ஆசியக் கோப்பை - மொஹ்சின் நக்விImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 21 Oct 2025 19:48 PM IST

2025 ஆசிய கோப்பையில் (Asia Cup 2025) சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இதுவரை கோப்பையை பெறவில்லை. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை பெற இந்திய அணி மறுத்துவிட்டது . அதன் பிறகு, மொஹ்சின் நக்வி இந்த கோப்பையை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைமையகத்தில் கொண்டு சென்றுள்ளார். இதற்கிடையில், இந்த கோப்பையை இந்தியாவுக்கு வழங்க மொஹ்சின் நக்வி தயாராக இல்லாததால், இந்தியா இப்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. கிடைத்த தகவலின்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நேரடியாக நக்விக்கு மெயில் மூலம் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கைக்குப் பிறகும், மொஹ்சின் நக்வி கோப்பையை வழங்கவில்லை என்றால், அவர் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும், இந்தியா அதை மெயில் செய்திருந்தாலும், நக்வி கோப்பையை திருப்பித் தருவாரா? நக்வி கோப்பையை திருப்பித் தரவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: அரையிறுதி அபாயம்! 5வது இடத்திற்கு பின்தங்கிய இந்தியா.. புள்ளிகள் பட்டியல் நிலவரம்!

இந்தியா என்ன செய்யும்..?


கிடைத்த தகவலின்படி, பிசிசிஐ ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் மொஹ்சின் நக்விக்கு அதிகாரப்பூர்வமாக ஒரு மின்னஞ்சல் எழுதியுள்ளது. இந்த மின்னஞ்சலில், ஆசிய கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மொஹ்சின் நக்விக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், இந்த கோப்பையை இந்தியாவுக்கு வழங்காவிட்டால், இந்த விஷயம் வரும் மாதத்தில் நேரடியாக ஐசிசியை அடையக்கூடும் என்றும் பிசிசிஐ நக்வியை எச்சரித்துள்ளது.

2025ஆசிய கோப்பையின் கோப்பையை இந்தியாவிற்கு கொண்டு வர பிசிசிஐ முயற்சித்து வருகிறது. கடந்த 2025 செப்டம்பர் 30ம் தேதி ஏசிசி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நக்வியின் நடவடிக்கைகளுக்கு பிசிசிஐ ஆட்சேபனைகளை எழுப்பியது. இந்தக் கூட்டத்தில், 2025 ஆசிய கோப்பை கோப்பை இந்தியாவுக்குச் சொந்தமானது என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறினார். இந்தக் கோப்பையை அதிகாரப்பூர்வமாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் அல்லது பிசிசிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ராஜீவ் சுக்லா கூறினார்.

பிசிசிஐ செயலாளர் விமர்சனம்:

முன்னதாக, பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியாவும் நக்வியை கடுமையாக விமர்சித்திருந்தார். அதில், ”இந்திய அணி நக்வியிடமிருந்து கோப்பையை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தது. இது நக்விக்கு கோப்பையையும் பதக்கங்களையும் தன்னுடன் எடுத்துச் செல்லும் உரிமையை வழங்காது. நக்வியின் செயல் துரதிர்ஷ்டவசமானது மற்றும் விளையாட்டின் உணர்விற்கு எதிரானது. இந்தியாவிற்கு விரைவில் கோப்பையையும் பதக்கங்களையும் வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

ALSO READ: ஆசியக் கோப்பை விவகாரம்! பிசிசிஐயிடம் மன்னிப்பு கேட்டாரா நக்வி? வெளியான தகவல்!

இந்தியாவின் முன் உள்ள மாற்று வழி என்ன?

இந்த மெயிலுக்குப் பிறகும், நக்வி கோப்பையை இந்தியாவுக்குத் திருப்பித் தரவில்லை என்றால், இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும். நவம்பரில் துபாயில் ஒரு முக்கியமான ஐசிசி கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் பிசிசிஐ இந்தப் பிரச்சினையை எழுப்பும். இதனுடன், மொஹ்சின் நக்வி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிசிசிஐ ஐசிசியிடம் கோரிக்கை வைக்கும். எனவே எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.