Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ro – Ko Out: சொற்ப ரன்களில் சோகம்… அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரோஹித் – கோலி ஏமாற்றம்!

Australia vs India 1st ODI: 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஒருநாள் போட்டியில் களமிறங்கிய ரோஹித் சர்மாவிற்கு, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி 500வது சர்வதேச போட்டியாக அமைந்தது. இருப்பினும், இந்த சிறப்பு வாய்ந்த போட்டியில் ரோஹித் சர்மா வெறும் 8 ரன்கள் மட்டுமே ஆட்டமிழந்தார்.

Ro – Ko Out: சொற்ப ரன்களில் சோகம்… அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரோஹித் – கோலி ஏமாற்றம்!
விராட் கோலி- ரோஹித் சர்மாImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Oct 2025 10:11 AM IST

இந்தியா – ஆஸ்திரேலியா (IND vs AUS) இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெர்த் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீசுவதாக முடிவு செய்தது. இதன் அடிப்படையில், இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினர். அனைவரின் பார்வையும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி (Virat Kohli) மீது இருந்தது. இருப்பினும், இந்த இரண்டு ஜாம்பவான்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றினார். டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, இந்த 2 வீரர்களும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர். 7 மாதங்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கிய ரோஹித் மற்றும் கோலி 8 மற்றும் 0 என்ற முறையே ஆட்டமிழந்தனர்.

ALSO READ: இந்தியா வழியில் ஆப்கானிஸ்தான்! பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை ரத்து செய்ய திட்டம்!

8 ரன்களில் அவுட்டான ரோஹித் சர்மா:


2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஒருநாள் போட்டியில் களமிறங்கிய ரோஹித் சர்மாவிற்கு, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி 500வது சர்வதேச போட்டியாக அமைந்தது. இருப்பினும், இந்த சிறப்பு வாய்ந்த போட்டியில் ரோஹித் சர்மா வெறும் 8 ரன்கள் மட்டுமே ஆட்டமிழந்தார். நான்காவது ஓவர் வீசிய ஜோஷ் ஹேசில்வுட்டின் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆட முயற்சித்த ரோஹித் சர்மாவின் பேட்டில் எட்ஸ் பட்டு, இரண்டாவது ஸ்லிப்பில் இருந்த மேட் ரென்ஷாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

ALSO READ: பெர்த்தில் பிரமாண்டம் காட்டுவார்களா கோலி, ரோஹித்..? இதுவரை செயல்திறன் எப்படி..?

விராட் கோலி டக் அவுட்:


ரோஹித் சர்மா ஆட்டமிழப்பிற்கு பிறகு 3வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த விராட் கோலி கணக்கை திறக்காமலே வெளியேறியது ரசிகர்களுக்கு இன்னும் அதிர்ச்சியளித்தது. வெறும் 8 பந்துகளை எதிர்கொண்டு கோலி பூஜ்ஜியத்திற்கு (டக்) ஆட்டமிழந்தார். தொடர்ந்து, இந்திய கேப்டன் சுப்மன் கில்லும் 18 பந்துகளில் 10 ரன்கள் எடுத்த நிலையில் நாதன் எல்லிஸ் பந்தில் பிலிப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இந்திய அணி தற்போது 8.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. மழை குறுக்கிட்டதால் போட்டி இப்போது தடை பட்டுள்ளது.