IND vs AUS: பெர்த்தில் பிரமாண்டம் காட்டுவார்களா கோலி, ரோஹித்..? இதுவரை செயல்திறன் எப்படி..?
Virat Kohli and Rohit Sharma Odi Record In Perth: 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் விராட் கோலி (Virat Kohli) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மீண்டும் களமிறங்குவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்த ஜோடி முதல் முறையாக இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார்கள்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் (IND vs AUS) இந்திய அணியின் ஒருநாள் கேப்டனாக சுப்மன் அறிமுகமாகிறார். மேலும் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் விராட் கோலி (Virat Kohli) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மீண்டும் களமிறங்குவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்த ஜோடி முதல் முறையாக இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார்கள். இந்த தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே மொத்தம் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறும். இதன் முதல் போட்டியானது நாளை அதாவது 2025 அக்டோபர் 19ம் தேதி இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இந்தநிலையில், போட்டி நடைபெறும் பெர்த் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ரோஹித் சர்மா விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் படைத்த சாதனை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள்.. போட்டியை எங்கு காணலாம்..?
பெர்த்தில் ரோஹித்தின் புள்ளிவிவரங்கள்:
பெர்த் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ரோஹித் சர்மா இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரை 4 போட்டிகளில் 1 சதம் மற்றும் 1 அரைசதம் உள்பட 245 ரன்கள் எடுத்துள்ளார். இந்த மைதானத்தில் ரோஹித்தின் சராசரி 122.5 ஆகும். மேலும், இந்த ஸ்டேடியத்தில் ரோஹித் சர்மா 25 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களையும் அடித்துள்ளார். 2016ம் ஆண்டு பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 7 சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்டரிகளுடன் ரோஹித் ஆட்டமிழக்காமல் 171 ரன்கள் எடுத்திருந்தார். ரோஹித்தின் 171 ரன்கள் பெர்த்தில் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.




ரோஹித் சர்மாவின் ஒருநாள் போட்டி வாழ்க்கை:
ரோஹித் சர்மா இந்திய அணிக்காக இதுவரை 273 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி 48.77 சராசரி மற்றும் 92.81 ஸ்ட்ரைக் ரேட்டில் 32 சதங்கள் மற்றும் 58 அரைசதங்களுடன் மொத்தம் 11,168 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 344 சிக்ஸர்கள் மற்றும் 1,044 பவுண்டரிகள் அடித்துள்ளார். இது மட்டுமின்றி, ரோஹித் சர்மா தனது வாழ்க்கையில் 3 ஒருநாள் இரட்டை சதங்கள் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார்.
பெர்த் ஸ்டேடியத்தில் விராட் கோலி புள்ளிவிவரங்கள்:
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் விராட் கோலி பெர்த் ஸ்டேடியத்தில் டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் டெஸ்ட் போட்டிகளில் கோலி ஒரு சதம் அடித்துள்ள நிலையில், இதுவரை பெர்த் ஸ்டேடியத்தில் ஒரு ஒருநாள் போட்டியில் கூட விளையாடியதில்லை.
ALSO READ: 3 சதம் அடித்தால் உலகக் கோப்பையில் வாய்ப்பா..? ரோஹித் – கோலி எதிர்காலம் குறித்து அஜித் அகர்கர்!
விராட் கோலியின் ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கை:
விராட் கோலி இந்திய அணிக்காக இதுவரை 302 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 57.88 சராசரி மற்றும் 93.34 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 51 சதங்களுடன் 14,181 ரன்கள் எடுத்துள்ளார். விராட் கோலி ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக 183 ரன்கள் ஆகும். அதேநேரத்தில், ஆஸ்திரேலியாவில் மொத்தம் 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5 சதம் மற்றும் 6 அரைசதங்களுடன் 1,327 ரன்கள் குவித்துள்ளார்