Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2027 ODI World Cup: 3 சதம் அடித்தால் உலகக் கோப்பையில் வாய்ப்பா..? ரோஹித் – கோலி எதிர்காலம் குறித்து அஜித் அகர்கர்!

Rohit Sharma - Virat Kohli Future: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கரின் கருத்துகளின்படி, ஆஸ்திரேலிய தொடர் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான ஒரு சோதனை தொடர் அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறது.

2027 ODI World Cup: 3 சதம் அடித்தால் உலகக் கோப்பையில் வாய்ப்பா..? ரோஹித் – கோலி எதிர்காலம் குறித்து அஜித் அகர்கர்!
விராட் கோலி - ரோஹித் சர்மாImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Oct 2025 08:19 AM IST

2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் விராட் கோலி (Virat Kohli) விளையாடுவார்களா என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. அதேபோல், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இதற்கான விடையை தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தநிலையில், இந்திய அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் எதிர்காலம் குறித்துப் பேசியுள்ளார். அதில், ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித் மற்றும் விராட் விளையாடுவார்களா என்பது குறித்து தெளிவாக பதிலளித்தது மட்டுமின்றி, அவர்களை பாராட்டவும் செய்துள்ளார்.

ரோஹித்-விராட் பற்றி அகர்கர் என்ன சொன்னார்?


NDTV-யிடம் பேசிய அஜித் அகர்கர், ”ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான அணியில் நான் ஒரு பகுதியாக இருக்கிறேன். இதுதொடர்பாக நீண்ட காலமாக சிறப்பாகவும், உன்னிப்புடனும் கவனித்து வருகிறேன். இது எந்த ஒரு வீரரையும் முன்னிலைப்படுத்துவதற்கான தளம் இதுவல்ல, நமது கவனம் முழு அணியிலும் அதன் கூட்டு இலக்கிலும் இருக்க வேண்டும்.

ALSO READ: கிரிக்கெட் வாழ்க்கை ஓவரா? – விராட் கோலி கொடுத்த தரமான பதிலடி!

அடுத்த 2 வருடங்களில் நிலைமை எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. அப்படியானால் இந்த 2 வீரர்களில் மட்டும் ஏன் கவனம் செலுத்த வேண்டும்? அணியில் இன்னும் பல திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மீது அதிக அழுத்தம் இருப்பதாக தெரியவில்லை. அவர்கள் ஏற்கனவே தனது செயல்திறன் மூலம் கோப்பைகளை வெல்வது அல்லது ரன்கள் எடுப்பது என அனைத்தையும் நிரூபித்துள்ளனர். இந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் அவர் அவர்கள் இருவரும் ரன்கள் அடிக்கவில்லை என்றால் நீக்கப்படுவார் என்றோ, அல்லது அவர்கள் மூன்று சதங்கள் அடித்தால், 2027 இல் அவருக்கு இடம் உறுதி செய்யப்படும் என்றோ அர்த்தமில்லை. இப்போதைக்கு, இது எதிர்காலத்தைப் பொறுத்தது. எதிர்காலத்தில் விஷயங்கள் எப்படி நடக்கும் என்று பார்ப்போம்.

ALSO READ: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள்.. போட்டியை எங்கு காணலாம்..?

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம்பிடித்த ரோஹித் – கோலி:

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கரின் கருத்துகளின்படி, ஆஸ்திரேலிய தொடர் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான ஒரு சோதனை தொடர் அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறது. 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு இன்னும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் உள்ளன. இதற்கு முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் அதிரடியாக விளையாடத் தயாராக உள்ளனர். இருவரும் கடைசியாக 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக இந்தியாவுக்காக விளையாடினார்கள். இப்போது, ​​கிட்டத்தட்ட 7 மாதங்களுக்குப் பிறகு, ரோஹித் மற்றும் கோலி மீண்டும் களத்தில் இறங்குவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.