பெத்தி படத்தின் ட்ரெய்லரை வெகுவாகப் பாராட்டிய சூர்யா பட தயாரிப்பாளர்
Film producer Naga Vamsi highly praised Peddi Movie | தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் ராம் சரண் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் பெத்தி. இந்தப் படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாக உள்ள நிலையில் அந்த ட்ரெய்லரை தயாரிப்பாளர் நாக வம்சி பாராட்டியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனாக தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படம் தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி உலக அளவில் உள்ள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் நடிகர் ராம் சரண் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பெத்தி.
தெலுங்கு சினிமாவில் உருவாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான உப்பென்னா என்ற படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்த பெத்தி படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பெத்தி படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வரும் நிலையில் நாளை படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளது. இந்த ட்ரெய்லரைப் பார்த்த சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி பாராட்டி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




பெத்தி படத்தின் ட்ரெய்லரை வெகுவாகப் பாராட்டிய பிரபல தயாரிப்பாளர்:
அதன்படி தயாரிப்பாளர் நாக வம்சி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, இப்போதுதான் பெத்தி படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தேன். இந்த ட்ரெய்லர் முற்றிலும் அவுட் ஆஃப் பாக்ஸாக உள்ளது. மேலும் மெகா பவர்ஸ்டார் ராம் சரண் இந்தப் படத்தில் பீஸ்ட் மோடில் உள்ளார். ஜான்வி கபூர் மிகவும் சிறப்பாக உந்தப் படத்தில் உள்ளார் என்று அந்த பதிவில் தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தயாரிப்பாளர் நாக வம்சி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Just watched the #PeddiTrailer… this one is going straight OUT OF THE PARK💥
Kohli Cricket…adatam andaru chusaru kadha adhe Kohli kusthi kuda aadithe Ela untundo just imagine ala Undi🔥🔥🔥
Mega Powerstar @AlwaysRamCharan garu in an absolute beast mode! ❤️🔥#JanhviKapoor…
— Naga Vamsi (@vamsi84) May 17, 2026
Also Read… ராஜஸ்தானில் ஒரு முக்கியமான ஷெட்யூலை விருஷகர்மா படக்குழு