AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Smriti Mandhana: தொகுப்பாளர் கேட்ட கேள்வி.. குளமாகிய கண்கள்.. வலிகளை மறைத்த ஸ்மிருதி மந்தனா!

Smriti Mandhana Crying Video: ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் வரை சென்று நிச்சயதார்த்தத்துடன் நின்றது. இந்தநிலையில், ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் போது, ​​ஸ்மிருதி மந்தனாவிடம் அவரது வாழ்க்கையின் "மிகக் கடினமான இரவு" எது என்று கேட்கப்பட்டது. பதிலை சொல்ல நேரம் எடுத்த ஸ்மிருதி மந்தனா சிறிது நேரம் எடுத்துக்கொண்டு, பின்னர் தான் "கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமே பேசுவேன்" என்று தெளிவுபடுத்தினார்.

Smriti Mandhana: தொகுப்பாளர் கேட்ட கேள்வி.. குளமாகிய கண்கள்.. வலிகளை மறைத்த ஸ்மிருதி மந்தனா!
ஸ்மிருதி மந்தனா அழுகை
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Sep 2026 16:38 PM IST

இந்திய மகளிர் அணியின் (Indian Womens Cricket Team) நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்மிருதி மந்தனா, தற்போது 2026 ஆசியக் கோப்பையில் (2026 Asia Cup) விளையாடி வருகிறார். இதற்கிடையில், ஸ்மிருதி மந்தனா சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவரது முகபாவனைகள் ரசிகர்கள் கண்களையும் கலங்க செய்தது. தனியார் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) பங்கேற்றபோது, ஒவ்வொரு கேள்வியும் பட்டாசு போல் வெடித்தது. அப்போது, கண்களில் வலியுடனும், ஒரு போலியான புன்னகையுடனும், மந்தனா தனது தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள வலியை மறைக்க தன்னால் முடிந்தவரை முயற்சித்தார். இருப்பினும், ரசிகர்கள் அவரது முகத்தில் இருந்த வலியை மறைத்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ: மகளிர் ஆசியக் கோப்பை.. இந்தியா – இலங்கை இறுதிப் போட்டி.. தம்புல்லா தோல்விக்கு பழி தீர்க்குமா இந்தியா?

எல்லோருக்கும் தெரிந்தபடி, ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் வரை சென்று நிச்சயதார்த்தத்துடன் நின்றது. இந்தநிலையில், ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் போது, ​​ஸ்மிருதி மந்தனாவிடம் அவரது வாழ்க்கையின் “மிகக் கடினமான இரவு” எது என்று கேட்கப்பட்டது. பதிலை சொல்ல நேரம் எடுத்த ஸ்மிருதி மந்தனா சிறிது நேரம் எடுத்துக்கொண்டு, பின்னர் தான் “கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமே பேசுவேன்” என்று தெளிவுபடுத்தினார். திருமணம் முடிவுக்கு வந்ததிலிருந்து, கடந்த 2025ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்ட பலாஷ் முச்சலைப் பற்றி ஸ்மிருதி மந்தனா ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

மந்தனா கடைசியாக எப்போது அழுதார்?


முதலில் அந்த பாட்காஸ்டில், ஷமானி அவரிடம் கடைசியாக எப்போது அழுதீர்கள் என்று கேட்டார். அதற்கு மந்தனா, ” ஒருவேளை எப்போதாவது குளியலறையிலோ அல்லது குளிக்கும்போதோ இருக்கலாம்; ஆனால் மற்றவர்கள் முன்னிலையில் அல், அது ஒரு நல்ல கேள்வி, ஆனால் எனக்கு நினைவில்லை. உண்மையில், நான் திரைப்படங்கள் பார்த்த பிறகுதான் அழுவேன். என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி நான் ஒருபோதும் அழுவதில்லை. நான் ஒரு திரைப்படம் பார்க்கும்போதுதான் அழுவேன். கடைசியாக முசாஃபிர் கஃபே’ திரைப்படத்தைப் பார்த்தபோது, ​​நான் உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டேன்,” என்றார்.

ALSO READ: ஆசிய விளையாட்டுப் போட்டி! இந்திய அணியில் பெரிய மாற்றம்.. என்ன தெரியுமா?

கண்ணீரை அடக்கிக்கொண்ட மந்தனா:

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஷமானி அவரிடம் மிகவும் கடினமான இரவு எது என்று கேட்டபோது, ​​மந்தனா ஒரு கணம் தயங்கினார். பிறகு, “ஒருவேளை உலகக் கோப்பையாக இருக்கலாம்.” என்றார். அந்த உரையாடலின்போது தனிப்பட்ட அல்லது அதிக உணர்ச்சிப்பூர்வமான கேள்விகளை ஸ்மிருதி மந்தனா தவிர்த்தார். அதன்பிறகு,  “நான் கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமே பேசுவேன். யாராலும் என்னுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. ஆனால் எனக்குக் கடுமையான கோபம் வரும். அது ‘என்னிடம் வம்பு செய்யாதே’ என்பது போன்ற ஒரு குணம். நான் உங்கள் வழியில் குறுக்கிடாத வரை, நீங்கள் என் வழியில் குறுக்கிடாதீர்கள். நான் பழிவாங்க மாட்டேன், ஆனால் மறக்கவும் மாட்டேன். ஆனால் நான் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ய மாட்டேன்,” என்று கூறினார்.

Follow Us