AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Team India: ஒரே நாள் ஒரே நேரம்.. சர்வதேச போட்டிகளில் மோதும் இந்திய அணிகள்..!

Team India schedule: இந்திய ஆண்கள் அணி (Indian Mens Cricket Team) ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடுகிறது. மறுபுறம், 2026 மகளிர் ஆசியக் கோப்பையில் இந்திய மகளிர் அணியும் (Indian Womens Cricket Team), இலங்கை மகளிர் அணியும் மோத இருக்கின்றன. இதில், வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

Team India: ஒரே நாள் ஒரே நேரம்.. சர்வதேச போட்டிகளில் மோதும் இந்திய அணிகள்..!
இந்திய ஆடவர் அணி - இந்திய மகளிர் அணி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Sep 2026 18:50 PM IST

நாளை அதாவது 2026 செப்டம்பர் 13ம் தேதி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு உண்மையிலேயே ஒரு சூப்பர் சண்டேவாக அமைய போகிறது. அதாவது, ஒரே நாளில் இந்திய ஆடவர் அணியும், இந்திய மகளிர் அணியும் 2 முக்கியப் போட்டிகளில் விளையாட இருக்கின்றன. ஒருபுறம், இந்திய ஆண்கள் அணி (Indian Mens Cricket Team) ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடுகிறது. மறுபுறம், 2026 மகளிர் ஆசியக் கோப்பையில் இந்திய மகளிர் அணியும் (Indian Womens Cricket Team), இலங்கை மகளிர் அணியும் மோத இருக்கின்றன. இதில், வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும். இந்தநிலையில், இரண்டு முக்கிய போட்டிக்கான விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: தொடர்ந்து 3வது முறையாக பைனலில் மோதல்.. இந்தியாவா? இலங்கையா? யாருக்கு சாதகம்?

இந்தியா vs ஆப்கானிஸ்தான்:

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் தொடங்குகிறது. இந்தத் தொடரின் சிறப்பான விஷயம் என்னவென்றால், போட்டி இந்தியாவில் நடைபெற்றாலும், ஆப்கானிஸ்தான்தான் அதிகாரப்பூர்வமாக இந்தத் தொடரை நடத்த இருக்கிறது.

இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயரும், ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இப்ராஹிம் ஜத்ரானும் நியமிக்கப்பட்டுள்ளனர். இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை அதாவது 2026 செப்டம்பர் 13ம் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்குத் தொடங்கும்.

போட்டியை எங்கு காணலாம்..?

இந்தப் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஃபேன் கோட் செயலி மூலமாகவும் நேரலையாகக் காணலாம்.

2026 ஆசியக் கோப்பை பைனல் – இந்தியா மகளிர் vs இலங்கை மகளிர்:

2026 செப்டம்பர் 13ம் தேதியான நாளை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருக்கும் மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதவுள்ளன. கடந்த 2024 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை சாம்பியன் பட்டம் வென்றது. தற்போது இரு அணிகளும் மீண்டும் மோதவுள்ள நிலையில், இந்தப் போட்டியின் மூலம் இந்திய அணி பழிதீர்த்துக் கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, தங்களின் 8வது ஆசியக் கோப்பையை வெல்லப் போராடும். சமரி அதபத்து தலைமையிலான இலங்கை அணி, தங்களது பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ள கடுமையாக முயற்சிக்கும். இரு அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்குத் தொடங்கும்.

ALSO READ: ஒரே நாளில் இந்திய அணிக்குள் இவ்வளவு சிக்கலா? முக்கிய வீரருக்கு காயம்!

பைனல் போட்டியை எங்கு காணலாம்..?

2026 மகளிர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் காணலாம். மேலும், சோனி லைவ் ஆப்பிலும் இப்போட்டியின் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

Follow Us