AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IPL 2027: மீண்டும் கேப்டன் ரோஹித் சர்மா.. மும்பை இந்தியன்ஸ் அறிவிப்பு!

Mumbai Indians Captain: ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக 5 முறை சாம்பியன் பட்டம் வெல்ல வழிநடத்தினார். இதனுடன், ரோஹித் சர்மா எம்.எஸ். தோனியுடன் இணைந்து ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக உள்ளார்.

IPL 2027: மீண்டும் கேப்டன் ரோஹித் சர்மா.. மும்பை இந்தியன்ஸ் அறிவிப்பு!
ரோஹித் சர்மாImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 27 Nov 2026 19:06 PM IST

ஐபிஎல் 2027 தொடருக்கு (IPL 2027) முன்னதாக, 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, ஐபிஎல் 2027 தொடருக்கான தங்களின் புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்துள்ளது. 2013 முதல் 2024 வரை 11 ஆண்டுகள் அணியை வழிநடத்திய பிறகு, கடந்த 2024ம் ஆண்டு ரோஹித் சர்மா (Rohit Sharma) கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, ஹர்திக் பாண்ட்யா அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். கடந்த 3 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றதால், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு கேப்டன்ஷி மாற்றம் தேவைப்பட்டது.

ALSO READ: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் இவர்தான்.. வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

கடந்த 3 ஆண்டுகளில் களத்தில் வீரரின் செயல்பாடு மற்றும் களத்திற்கு வெளியே ஏற்பட்ட சில சர்ச்சைகள் குறித்து மும்பை நிர்வாகம் அதிருப்தி அடைந்தது. இதன் விளைவாக, மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்ட்யாவை டிரேடு செய்து அர்ஷ்தீப் சிங்கை வாங்கியது. இந்த முடிவு மும்பை அணியை மீண்டும் ஒரு புதிய கேப்டனைத் தேடும் நிலைக்குத் தள்ளியது. புதிய ஒருவரை நியமிப்பதற்குப் பதிலாக, 5 முறை சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய ரோஹித் சர்மாவை மீண்டும் கேப்டனாக கொண்டு வந்தனர்.

புதிய தலைமை பயிற்சியாளர்:

புதிய தலைமை பயிற்சியாளர் கீரன் பொல்லார்டின் தலைமையில், ஹர்திக் பாண்ட்யா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அனுப்பப்பட்டதன் மூலம் அணி நிர்வாகம் ஒரு பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது. அணியை மீண்டும் ஒன்றிணைப்பதற்காக, மும்பை இந்தியன்ஸ் அணி அனுபவம் வாய்ந்த ரோஹித் சர்மா மீது மீண்டும் நம்பிக்கை வைத்துள்ளது. ரோஹித் சர்மா 2013 சீசனின் பாதியில் கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு, அதே ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.

ALSO READ: இந்திய அணிக்காக விளையாடிய 7 வீரர்கள்.. அன்கேப்டு வீரர்களா? ஐபிஎல்லில் இப்படி ஒரு விதியா?

ரோஹித் சர்மா தலைமையின் கீழ்..

ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக 5 முறை சாம்பியன் பட்டம் வெல்ல வழிநடத்தினார். இதனுடன், ரோஹித் சர்மா எம்.எஸ். தோனியுடன் இணைந்து ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக உள்ளார். ரோஹித் சர்மா இதுவரை மொத்தம் 158 ஐபிஎல் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். இவற்றில், அவர் 87 போட்டிகளில் வெற்றியும் 67 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளார். கேப்டனாக ரோஹித் சர்மாவின் வெற்றி சதவீதம் 55.06% ஆகும், இது அவரை இந்த லீக்கின் வரலாற்றில் இரண்டாவது மிகவும் வெற்றிகரமான கேப்டனாக ஆக்குகிறது.

Follow Us