பிக்பாஸில் இந்த வீக்லி டாஸ்க் சூப்பரா இருக்கே… வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு வாரம் வாரம் ஒரு போட்டி நடத்தி அதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த வாரத்திற்கான தல போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கொடுக்கப்படுகின்றது.
கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியது. தற்போது 44-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து சண்டை சண்டை என ஒரே சண்டை மட்டுமே இந்த நிகழ்ச்சியில் இருந்தது. இது தொடர்பாக ரசிகர்கள் பல நெகட்டிவ் விமர்சங்களை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே டாக்ஸிக்காக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து வாரம் வாரம் வரும் விஜய் சேதுபதியும் தொடர்ந்து போட்டியாளர்கள் மீது வரும் நெகட்டிவ் விமர்சனங்களை வெளிப்படையாகவே பேசினார். ஆனாலும் தொடர்ந்து போட்டியாளர்கள் அவர்களின் போக்கிலேயே சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் அனுப்பப்பட்டனர்.
வைல்கார்ட் போட்டியாளர்கள் உள்ளே சென்றதும் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களின் ஆட்டம் மாறத் தொடங்கியது. தொடர்ந்து டாக்ஸிக்காக மட்டுமே சென்று கொண்டிருந்த நிலையில் விளையாட்டில் மாற்றம் ஏற்பட்டு பார்வையாளர்கள் விமர்சனம் மாறத் தொடங்கியது. அதன்படி இந்த நிகழ்ச்சி தற்போது பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. பல சுவாரஸ்யமான டாஸ்குகள் வழங்கப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
வித்யாசமான வீக்லி டாஸ்கை வழங்கிய பிக்பாஸ்:
அந்த வகையில் இந்த 7-வது வாரத்திற்கான பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் வீக்லி டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த டாஸ்கிற்காக பிக்பாஸ் வீடு மூன்று அணிகளாக பிறிந்து விளையாட வேண்டும். அதில் எந்த அணி வெற்றிப் பெறுகிறதோ அந்த அணியில் உள்ள அனைவரும் பிக்பாஸ் வீட்டில் 8-வது வாரத்திற்கான வீட்டு தல டாஸ்கில் கலந்துகொள்ள முடியும் என்று பிக்பாஸ் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மூன்று அணிகளாக பிரிந்து விளையாடும் வீடியோவை பிக்பாஸ் நிகழ்ச்சி குழு அறிவித்துள்ளது.




Also Read… பிக்பாஸில் என்னோட காம்பெடிஷன் இவர் தான் – பார்வதி சொன்னது யார் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட வீடியோ:
Also Read… ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? வைரலாகும் தகவல்