Parasakthi: நெருங்கும் ரிலீஸ்… ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட ‘பராசக்தி’ படக்குழு!
Parasakthi Special Poster: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் 25வது திரைப்படமாக உருவகைவருவதுதான் பராசக்தி. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாக காத்திருக்கும் நிலையில், தற்போது ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) அமரன் (Amaran) திரைப்படம் வெளியானத்திற்கு பின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராகிவிட்டார். இந்த படம் இவருக்கு எதிர்பாராத ஹிட்டை கொடுத்திருந்த நிலையில், இப்படத்தை அடுத்ததாக அதிரடி ஆக்ஷன் படங்களையே தேர்ந்தெடுக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக மதராஸி (Madharaasi) என்ற திரைப்படமானது வெளியானது. இந்த படமானது இவருக்கு கலவையான விமரசங்களையே கொடுத்திருந்தது. இந்த படமானது இவருக்கு ரூ100 கோடி வசூல் செய்து வெற்றிபெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகிவரும் படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த திரைப்படத்தை சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் பராசக்தி படமானது உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன் (Ravi Mohan), அதர்வா (Athrvaa) மற்றும் ஸ்ரீலீலா (Sreeleela) இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படமானது வரும் 2026ம் ஜனவரி 14ம் தேதியில் பொங்கல் பண்டிகையில் வெளியாகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கும் நிலையில், தற்போது படக்குழு ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது .




இதையும் படிங்க: அப்பா – மகன் காம்போவில் உருவான முதல் பாடல்… கொம்புசீவி படத்தில் இணைந்து பாடிய இளையராஜா, யுவன்!
ஸ்பெஷல் போஸ்டரை வெளிட்ட பராசக்தி படக்குழு :
தீ பரவட்டும் 🔥🧨#ParasakthiFromPongal#ParasakthiFromJan14@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @DawnPicturesOff @redgiantmovies_ @Aakashbaskaran @sreeleela14 @saregamasouth @dop007 @editorsuriya @supremesundar #KarthikRajkumar… pic.twitter.com/rcoHbjEhU8
— DawnPictures (@DawnPicturesOff) November 17, 2025
இந்த போஸ்டரில் நடிகர் சிவகார்த்திகேயன் ரயில் தண்டவாளத்தில், ரத்த கரையுடன் நிற்பதுபோல உள்ளது. இந்த படமானது 60ல் நடந்த கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் மற்றும் மற்ற நடிகர்களின் கதாபாத்திரங்களும் முற்றிலும் வித்தியாசமாக அமைந்துள்ளது. இப்படம் இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான கதைக்களத்தில் உருவாகியுள்ள நிலையில், மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.
பராசக்தி பட 2வது பாடல் அப்டேட் :
மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துவருகிறார். பராசக்தி படமானது இவரின் இசையமைப்பில் உருவாகும் 100வது திரைப்படமாகும். இதற்காகவே இவர் சிறப்பாக பாடல்களை உருவாக்கிவருகிறார். இப்படத்திலிருந்து “அடி அலையே” என்ற முதல் பாடல் சமீபத்தில் வெளியாகியிருந்தது.
இதையும் படிங்க: ரிலீஸிற்கு முன்பே தொடங்கிய போட்டி.. விஜய்யின் ஜன நாயகன் பேனரின் மேல் இடம்பெற்ற சிவகார்த்திகேயன் பராசக்தி பட பேனர்!
2வது பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். விரைவில் இப்படத்தின் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தொடங்கிய நிலையில், படத்தின் அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.