Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடித்துள்ள படத்தின் டைட்டில் டீசரை வெளியிடும் ரஜினிகாந்த்

Abishan Jeevinth Movie Title Teaser: தமிழ் சினிமாவில் தற்போது தொடர்ந்து இயக்குநர்களாக வலம் வரும் பலர் நடிகர்களாக அவதாரம் எடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இயக்குநராக ஒரு படம் மட்டுமே ஹிட் கொடுத்த அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடித்துள்ளார்.

அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடித்துள்ள படத்தின் டைட்டில் டீசரை வெளியிடும் ரஜினிகாந்த்
அபிஷன் ஜீவிந்த், ரஜினிகாந்த்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Nov 2025 12:59 PM IST

இந்திய சினிமாவைப் பொருத்தவரை ஆரம்ப காலக்கட்டத்தில் இயக்குநர்களாக பணியாற்றுபவர்கள் திரையில் தோன்றுவது அரிதான விசயமாக இருக்கும். அவர்கள் இயக்கும் படங்களிலேயே அவர்கள் ஒரு காட்சிக்கு வருவது கூட மிகமிக குறைவானதாகவே இருக்கும். இப்படி இருந்த சூழலில் தான் 90களில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தொடர்ந்து அவர் இயக்கும் படங்களில் ஏதேனும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிப்பார். குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு கேமியோ என்பதை அறிமுகம் செய்து வைத்தவர் கே.எஸ்.ரவிக்குமார் (KS Ravikumar) என்று ரசிகர்கள் தற்போதும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சினிமாவில் பல மாற்றங்கள் நடந்துள்ளது. நடிகர் இயக்குநராகிறார். இயக்குநர் நடிகராகிறார். இசையமைப்பாளர் நடிகராகிறார். இப்படி யார் வேண்டுமானாலும் எந்த துறையில் வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என்பது இயல்பான விசயமாக மாறிவிட்டது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்பு பல ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர்கள் பலர் தற்போது படங்களை இயக்குவதை தவிர்த்துவிட்டு தொடர்ந்து படங்களில் நடிகர்களாக நடித்து வருகின்றனர். அந்த வரிசையை கோலிவுட் சினிமாவில் பட்டியளிட்டால் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இப்படி இருக்கும் நிலையில் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கிய இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தற்போது நாயகனாக தமிழ் சினிமாவில் படம் ஒன்றில் நடித்துள்ளார். இவர் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் இரண்டாவது படம் யாரை வைத்து இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இந்த செய்தி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

அபிஷன் ஜீவிந்த் நடித்துள்ள படத்தின் டைட்டில் டீசரை வெளியிடும் ரஜினி:

இந்தப் படத்தை டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் அபிஷன் உடன் இணைந்து உதவி இயக்குநராக பணியாற்றிய மதன் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் அபிஷன் ஜீவ்ந்திற்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தப் படத்தின் டைட்டில் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read… வருங்கால மனைவி சாய் தன்ஷிகாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன விஷால் – வைரலாகும் பதிவு

சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நடிகர் ஃபகத் பாசிலின் வித்யாசமான நடிப்பில் நார்த் 24 காதம் படத்தை மிஸ் செய்யாதீர்கள்