AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த போட்டோவில் இருக்கும் சிறுமி யார் தெரியுமா? ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்!

Actresses Childhood Photo: தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பல உச்ச நடிகைகள், படங்களில் கதாநாயகியக நடித்து ரசிகர்களை கவர்ந்துவருகிறார்கள். அந்த விதத்தில் அவர்களின் சிறுவயது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகுவது வழக்கமே. அந்த விதத்தில் இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி எந்த நடிகை என பார்க்கலாம்.

இந்த போட்டோவில் இருக்கும் சிறுமி யார் தெரியுமா? ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்!
பிரபல நடிகையின் சிறுவயது போட்டோஸ்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 29 Mar 2026 08:37 AM IST

சினிமாவில் தொடர்ந்து நடிகைகள், பிரபல நடிகர்களுக்கு இணையாகவே திரைப்படங்களில் நடித்துவருகிறார்கள். நடிகர்கள் ஒரு படத்தில் நடிப்பதற்கு அதிகம் சம்பளம் வாங்குவது போலவே நடிகைகளும் அதிகமாக சம்பளம் பெற தொடங்கியவிட்டனர். அந்த விதத்தில் அந்த நடிகைகளின் அடையாளம் தெரியாத சிறுவயது புகைப்படங்கள் (Actress Childhood Photos) இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருவது வழக்கமே. இந்நிலையில் மேலே இருக்கும் போட்டோவில் கியூட்டாக ஒரு குழந்தையை கையில் வைத்திருக்கும் கிருமி எந்த நடிகை-னு தெரியுமா?. இவர் நடிகையாக கன்னட சினிமாவின் (Kannada Cinema) மூலம் நுழைந்தார். பின் தனது 2வது படத்திலே மலையாளம் சினிமாவில் லீட் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் இவருக்கு மலையாள சினிமாவில் ஒரு நல்ல வரவேற்பை கொடுத்தது. பின் தமிழில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவின்(Ashwath Marimuthu) இயக்கத்தில் வெளியான படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட முதல் படத்திலே, தனது நடிப்பு மற்றும் நடனத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார்.

இவர் தளபதி விஜய்யின் (Thalapathy VIjay) தீவிர ரசிகை என்றும் பல்வேறு இடங்களில் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது டோவினோ தாமஸ் (Tovino Tomas), நானி (Nani), அதர்வா மற்றும் ஜி.வி.பிரகாஷ் போன்ற நடிகர்களுடன் புது படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அட இந்த சிறுமி வேறுயாருமில்லை நடிகை கயாடு லோஹர்தான் (Kayadu Lohar).

இதையும் படிங்க: நா அந்த நடிகரின் மிகப்பெரிய ரசிகன்.. கார்த்தி அப்படி இல்லை – சூர்யா சொன்ன விஷயம்!

நடிகை கயாடு லோஹரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by kayadulohar (@kayadu_lohar_official)

நடிகை கயாடு லோஹர் கடந்த 2021ம் ஆண்டில் வெளியான முகில்பேட் என்ற கன்னட மொழி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து 2022ம் ஆண்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டு என்ற மலையாள படத்திலும், அல்லூரி என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்திருந்தார். தனது சினிமா வாழக்கை ஆரம்பத்திலே தொடர்ந்து அடுத்தடுத்த மொழிகளில் படங்களை நடிக்க தொடங்கிவிட்டார். அந்த விதத்தில் தமிழில் இவருக்கு பெரிதும் கைகொடுத்த படம் டிராகன்.

இதையும் படிங்க: என் எண்ணத்தை உடைத்து நொறுக்கிய உணர்ச்சிமிக்க படைப்பாக இருந்தது ஹேப்பிராஜ் – மாரி செல்வராஜ்

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியக நடித்து, இப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதையடுத்து தமிழில் இம்மார்ட்டல், இதயம் முரளி, STR49 என தொடர் படங்கள் அமைந்தது. மேலும் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் புது புது படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார். அந்த வகையில் சமூக ஊடகங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கயாடு லோஹர், அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துவருகிறாரா என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us