AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sivakarthikeyan: சேயோன் பட ஷூட்டிங் எப்போது? சிவகார்த்திகேயன் கொடுத்த அப்டேட்!

Seyon Shooting Update: தமிழில் தற்போது பிரபல கதாநாயகனாக கருதப்படுபவர் சிவகார்த்திகேயன். இவர் தாய் கிழவி பட இயக்குநருடன் புது படத்தில் இணைந்துள்ளார். அந்த படம்தான் சேயோன். இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிவகார்திகேயன், சேயோன் பட ஷூட்டிங் குறித்து அப்டேட் கொடுத்துள்ளர்.

Sivakarthikeyan: சேயோன் பட ஷூட்டிங் எப்போது? சிவகார்த்திகேயன் கொடுத்த அப்டேட்!
சிவகார்த்திகேயனின் சேயோன் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 08 Mar 2026 21:37 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் இறுதியாக வெளியான பராசக்தி (Parasakthi) படமானது எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இந்நிலையில் இப்படத்தை அடுத்ததாக அவர் வெங்கட் பிரபுவின் (Venkat Prabhu) இயக்கத்தில் புது படத்தில் இணைவார் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெறாத நிலையில், சிவகார்த்திகேயன் தாய் கிழவி (Thaai Kizhavi) பட இயக்குநர் சிவகுமார் முருகேசனுடன் (Sivakumar Murugesan) புது படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு “சேயோன்” (Seyon) என படக்குழு டைட்டில் வைத்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse) நடிப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

ஆனால் இது குறித்து படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை. இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ- ப்ரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இதன் ஷூட்டிங் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். தற்போது சேயோன் பட ஷூட்டிங் குறித்து சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: யாரை பழிவாங்க இதை செய்கிறார்?.. இருந்ததும் போச்சி – விஜய்யை கடுமையாக சாடிய சமுத்திரக்கனி!

சேயோன் பட ஷூட்டிங் குறித்து பேசிய சிவகார்த்திகேயன்:

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன், தனது தயாரிப்பில் வெளியான தாய் கிழவி பட வெற்றி மற்றும் மக்கள் ஆதரவிற்கு நன்றி தெரிவித்திருந்தார். மேலும் தாய் கிழவி படம் குறிப்பாக ஒவ்வொரு குடும்ப பெண்களுக்காக படைக்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: கொரியா-ல பாண்டிய இளவரசி செம்பவளம் சமாதி இருக்கு… நடிகை பிரியங்கா மோகன் பகிர்ந்த சுவாரஸ்ய விஷயம்!

மேலும் அதில் சேயோன் படம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், அதில் “எனது அடுத்த திரைப்படம் சேயோன். கமல்ஹாசன் சாரின் தயாரிப்பின் இது உருவாகிவருகிறது. இதன் ஷூட்டிங் 2026 ஏப்ரல் மாதத்தில் ஆரம்பமாகும். அதுதான் எனது அடுத்த படம்” என அதில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

சிவகார்த்திகேயன் வெளியிட்ட சேயோன் திரைப்படத்தின் புரோமோ வீடியோ குறித்த பதிவு:

இந்த் சேயோன் படமானது கமல்ஹாசனின் விருமாண்டி மற்றும் முருகன் தொடர்பான கதையில் தயாராகிவருகிறதாம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் திரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுடன் நடிகர் பாலா சரவணன் முக்கிய வேடத்தில் நடிக்கும் நிலையில், வித்தியாசமான கிராமத்து ஆக்ஷன் கதையில் தயாராகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தை வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது.

Follow Us