சினிமாவுக்கு குட்பை சொன்ன விஜய் மீண்டும் நடிக்கிறாரா? ரசிகர்களுக்கு வெளியான சர்ப்ரைஸ் தகவல்!
CM Vijay: விஜய் மீண்டும் நடிக்க வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள அரசு விளம்பரத் தகவல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு சார்பில் தயாரிக்கப்படும் விளம்பரத்தில் விஜய் தோன்ற உள்ளதாகவும், அதனை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நவம்பர் 7, 2026: தமிழக முதலமைச்சர் விஜய் மீண்டும் கேமரா முன்பு தோன்ற உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு சார்பில் தயாரிக்கப்பட உள்ள விளம்பரம் ஒன்றில் முதலமைச்சர் விஜய் நடிக்க இருப்பதாகவும், இந்த விளம்பரத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விளம்பரத்திற்கான படப்பிடிப்பு நவம்பர் மாத இறுதியில் அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து தமிழக அரசு தரப்பிலோ, முதலமைச்சர் விஜய் தரப்பிலோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
சினிமாவுக்கு குட்பை சொன்ன விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த விஜய், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கியபோதே 2026 சட்டமன்றத் தேர்தல்தான் தனது இலக்கு என்றும் அறிவித்திருந்தார். மேலும், மக்கள் சேவையில் முழுநேரமாக ஈடுபட இருப்பதால் இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: மத்திய – மாநில உறவுகள் ஆய்வுக்குச் செக்.. நீதிபதி குரியன் ஜோசப் குழுவை திடீரென கலைத்தது தமிழக அரசு!
இதனால், விஜய் சினிமாவில் இருந்து விலகுவதாக வெளியான அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், அரசியல் பயணத்தில் தீவிரமாக ஈடுபட்ட விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தனித்துப் போட்டியிட்டு சுமார் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தில் ஆட்சியையும் அமைத்தது. இதையடுத்து சி. ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆட்சி நிர்வாகத்தை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையே, விஜய் நடிப்பில் வெளியான கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அவரது கடைசிப் படம் என்ற அடிப்படையில் ரசிகர்கள் இந்தப் படத்தை உற்சாகத்துடன் கொண்டாடினர்.
மீண்டும் கேமரா முன் முதல்வர் விஜய்
இந்தச் சூழலில், விஜய் மீண்டும் நடிக்க வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள அரசு விளம்பரத் தகவல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு சார்பில் தயாரிக்கப்படும் விளம்பரத்தில் விஜய் தோன்ற உள்ளதாகவும், அதனை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: பட்டாசு வெடித்தால் காற்று மாசுபாடா.. நெவர்.. அதிக சத்தத்துடன் பட்டாசு வெடியுங்கள்.. வீ தி லீடர் அண்ணாமலை அழைப்பு!
இந்த விளம்பரத்திற்கான படப்பிடிப்பு இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத் தொடக்கத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யை மீண்டும் கேமரா முன்பு பார்க்கும் வாய்ப்பு அவரது ரசிகர்களுக்குக் கிடைக்கும்.