AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மேகதாது அணை குறித்த கர்நாடக முதல்வரின் பேச்சு – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம்!

Manickam Tagore To CM DK Shivakumar: மைசூருவில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் டி.கே. சிவகுமார் தெரிவித்த கருத்துக்கு மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கர்நாடக முதலமைச்சரின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேகதாது அணை குறித்த கர்நாடக முதல்வரின் பேச்சு – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம்!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 14 Nov 2026 11:43 AM IST

நவம்பர் 14, 2026: மேகதாதுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும், இதற்கு மத்திய அரசு இறுதி ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் பேசியதற்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதப் போக்கைக் கடைப்பிடித்து வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

மேகதாது அணை விவகாரத்தில் தொடரும் சர்ச்சை

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு கடந்த சில ஆண்டுகளாக தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு பாதிக்கப்படும் என்றும், குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் தமிழக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் விஜய் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

Also Read: சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள 50 கிலோ சூடோஎபிட்ரின் பறிமுதல்.. தந்தை, மகன் உட்பட 3 பேர் கைது!

ஆனால், இதற்கு மறுநாளே கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை என்றும், அணை கட்டுவது கர்நாடகாவின் உரிமை என்றும் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், மேகதாதுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும், மத்திய அரசு இறுதி ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்


இந்த நிலையில், மைசூருவில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் டி.கே. சிவகுமார் தெரிவித்த கருத்துக்கு மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கர்நாடக முதலமைச்சரின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பையும் மீறும் வகையில் கர்நாடக முதலமைச்சர் தொடர்ந்து பிடிவாதப் போக்கைக் கடைப்பிடித்து வருவதாக அவர் விமர்சித்துள்ளார். கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலும் இந்தப் பேச்சு அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் அனுமதி வழங்கக்கூடாது!

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாடு கீழ்படுகை மாநிலமாக இருப்பதால், தமிழகத்தின் உரிமைகளைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் கர்நாடகா தன்னிச்சையாகச் செயல்படுத்த முடியாது என மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: நகைக்கடை கொள்ளையில் திருப்பம்.. பட்டதாரி இளைஞர் வீட்டில் 15 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை.. புதருக்குள் பதுக்கப்பட்டதா தங்கம்?

கீழ்படுகை மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு எந்தவிதமான அனுமதியும் வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் அனுமதியின்றி இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது சட்டவிரோதமானது மட்டுமின்றி, டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மேகதாதுவில் கர்நாடக அரசு ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்க முடியாத வகையில் தடுப்பது மத்திய அரசின் கடமை என்றும், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.

 

Follow Us