“பள்ளி வளாகங்களில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது!”.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!
Tamil Nadu school political events ban: தமிழகத்தில் உள்ள பள்ளி வளாகங்களில் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி சாராத கூட்டங்களை நடத்த முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அதிரடிச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
சென்னை, நவ.14: தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் கல்வி நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பள்ளி வளாகங்களை அரசியல் களமாக மாற்றுவதைத் தடுக்கும் நோட்டத்துடனும், கல்விச் சூழல் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையிலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய மற்றும் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்களுக்குள் எந்தவிதமான அரசியல் நிகழ்ச்சிகளோ அல்லது கல்வி சாராத கூட்டங்களோ நடைபெறக் கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ள இந்தச் சுற்றறிக்கை கல்வி வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. நவீன வடிவமைப்புடன் களமிறங்கும் ‘ஹீரோ’ சைக்கிள்கள்.. அரசு எடுத்த அசத்தல் நடவடிக்கை!
கல்வி சாரா நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி:
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள இந்தச் சுற்றறிக்கையில் சில மிக முக்கியமான வழிகாட்டுதல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளிகள் என்பது மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கான இடமே தவிர அரசியல் கருத்துகளைப் பரப்பும் இடமோ அல்லது கூட்டங்களை நடத்தும் இடமோ அல்ல என்பது தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்களுக்குள் கல்வித்துறை சாரா நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், மாநாடுகள் போன்றவற்றுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், அவ்வாறு விதிகளை மீறி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய பிரமுகர்களின் வருகை:
பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு விழாக்களுக்குச் சிறப்பு விருந்தினர்களாகவோ அல்லது முக்கிய பிரமுகர்களாகவோ அழைக்கப்படுபவர்களின் நடவடிக்கைகளைத் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அழைக்கப்பட்ட விருந்தினர்கள் பள்ளிகளின் விதிமுறைகளை மீறிச் செயல்படுவதைத் தவிர்க்கவும், மாணவர்களின் பாதுகாப்பிற்கு எந்தவிதக் குந்த்கமும் ஏற்படாத வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: மதுரை நகைக்கடை கொள்ளை.. ஹைதராபாத்திற்கு நீளும் காவல்துறை விசாரணை.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
மாணவர்களை பாதுகாக்க அரசின் சீரிய நடவடிக்கை:
பள்ளிக்கூடங்கள் எப்போதுமே மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் அமைதியான மற்றும் தூய்மையான இடங்களாக இருக்க வேண்டும் என்பதே அரசின் பிரதான நோக்கமாகும். சமீபகாலமாகப் பள்ளி வளாகங்கள் சிலவற்றில் கல்விக்குச் சம்மந்தமில்லாத நிகழ்வுகள் நடைபெறுவது குறித்த புகார்கள் எழுந்ததைக் கருத்தில் கொண்டே பள்ளிக்கல்வித்துறை இந்தத் தடையை மீண்டும் கடுமையாக்கியுள்ளது. அரசின் இந்த அதிரடி உத்தரவு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் முழுமையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு கடும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.