Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பொங்கல் ஸ்பெஷல்! இன்றிரவு சென்னை – தென்காசிக்கு சிறப்பு ரயில் – எந்தெந்த ஸ்டேஷன்களில் நிற்கும்?

Special Train for Pongal : பொங்கலை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பேருந்து நிலையங்களில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் சென்னை - தென்காசி இடையே சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பொங்கல் ஸ்பெஷல்!  இன்றிரவு சென்னை – தென்காசிக்கு  சிறப்பு ரயில் – எந்தெந்த ஸ்டேஷன்களில் நிற்கும்?
சென்னை - தென்காசிக்கு சிறப்பு ரயில்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Jan 2026 16:28 PM IST

சென்னை, ஜனவரி 13 : பொங்கல் (Pongal) பண்டிகையை முன்னிட்டு, ரயில்கள் மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் கடுமையாக அதிகரித்துள்ளது. பொங்கல் சிறப்பு ரயில்கள் (Train) அனைத்தும் முன்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்படுதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பயணிகள் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், பயணிகள் நலனை கருத்தில் கொண்டு, சென்னை எழும்பூர் தென்காசி இடையே ஜனவரி 13, 2026 இன்று இரவு ஒரு சிறப்பு ரயிலை இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் கிளம்பும் நேரம், எந்தெந்த ஸ்டேஷன்களில் நிற்கும் என்பது போன்ற விவரங்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சென்னை – தென்காசி சிறப்பு ரயில்

பொங்கலுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பேருந்து மற்றும் ரயில் நிலையங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான ரயில்கள் அனைத்தும் முன்பதிவு முறையில் நிரம்பியுள்ளதால் மக்கள் பேருந்துகளை நம்பியுள்ளனர். இந்த நிலையில் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் தெற்கு ரயில்வே கூட்டநெரிசலை தவிர்க்க சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : சென்னையில் ஹெலிகாப்டர் ரைடு…பொதுமக்களுக்காக சுற்றுலாத் துறையின் அசத்தல் ஏற்பாடு!

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பொங்கல் காலகட்டத்தில் பயணிகளின் சிரமத்தை தவிர்க்க, ரயில் எண் 06072 என்ற சிறப்பு ரயில் ஜனவரி 13, 2026 இரவு 11.50 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து தென்காசிக்கு புறப்படும். இந்த ரயில் மொத்தம் 18 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. இதில், 8 ஸ்லீப்பர் கோச் பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

எந்தெந்த ரயில் நிலையங்களில் நிற்கும்?

இந்த சிறப்பு ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைரோடு, சோழவந்தான், கூடல் நகர், மதுரை, திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, கடம்பூர், திருநெல்வேலி, சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம் மற்றும் பாவூர்சத்திரம் ஆகிய நிலையங்கள் வழியாக இயக்கப்படும்.

இதையும் படிக்க : காணும் பொங்கல்.. பாதுகாப்பு பணியில் 16,000 காவல் துறையினர்.. சென்னையில் ஏற்பாடுகள் என்ன?

இந்த ரயில், அடுத்த நாள் மதியம் 3 மணிக்கு தென்காசியை அடையும் எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும், பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு, இந்த சிறப்பு ரயில் பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.