AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ: வெலிங்டன் பேசின் ரிசர்வ் பிட்ச் யாருக்கு சாதகம்..? பேட்ஸ்மேன்கள் திணறுவார்களா?

IND vs NZ 1st Test Pitch Report: இந்தியாவும் நியூசிலாந்தும் மோதும் முதல் டெஸ்ட் வெலிங்டனில் நவம்பர் 19, 2026 அன்று தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தகுதிக்கு இப்போட்டி முக்கியம். பேசின் ரிசர்வ் பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானது, புற்கள் நிறைந்தது. வானிலையில் மழை மற்றும் பலத்த காற்று எதிர்பார்க்கப்படுவதால், ஆட்டம் பாதிக்கப்படலாம். இந்தியாவின் டெஸ்ட் சாதனை இங்கு சிறப்பாக இல்லை.

IND vs NZ: வெலிங்டன் பேசின் ரிசர்வ் பிட்ச் யாருக்கு சாதகம்..? பேட்ஸ்மேன்கள் திணறுவார்களா?
இந்திய கேப்டன் சுப்மன் கில்Image Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Nov 2026 17:47 PM IST

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு (IND vs NZ) இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, நாளை அதாவது 2026 நவம்பர் 19ம் தேதி முதல் வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 3:30 மணிக்கு போட்டி தொடங்கும், டாஸ் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற இந்திய அணிக்கு (Indian Cricket Team) இந்த வெற்றி மிகவும் அவசியம். இல்லையெனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இந்திய அணியின் வாய்ப்புகள் பெரிதும் குறைந்துவிடும். இந்தநிலையில், பிட்ச் மற்றும் 5 நாட்களுக்குமான எதிர்பார்க்கப்படும் வானிலை நிலவரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: அதிகாலை நேரத்தில் இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் போட்டி.. அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்!

வெலிங்டனின் பேசின் ரிசர்வ் ஸ்டேடியத்தில் இந்தியாவின் டெஸ்ட் சாதனை சிறப்பாக இல்லை. இந்திய அணி இதுவரை இந்த ஸ்டேடியத்தில் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று, 5ல் தோல்வியடைந்து, இரண்டில் சமன் செய்துள்ளது. இங்கு இந்தியாவின் கடைசி டெஸ்ட் போட்டி 2020-ல் நடைபெற்றது. அதில், நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. தற்போதைய அணியிலும் இடம்பெற்றுள்ள ஜஸ்பிரித் பும்ரா, அந்தப் போட்டியில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தார்.

பேசின் ரிசர்வ் பிட்ச் ரிப்போர்ட்:


இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்காகத் தயாரிக்கப்பட்ட பிட்ச்சின் படங்கள் வெளியாகியுள்ளன. புகைப்படத்தில் பிட்ச்சில் அதிகளவில் புற்கள் தெரிகிறது. முதல் இரண்டு நாட்களில் பேட்ஸ்மேன்கள் கடுமையான சோதனையை எதிர்கொள்வார்கள். இந்த பிட்ச்சில் பந்து அதிக பவுன்ஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும். ஆனால், 4வது மற்றும் 5வது நாட்களில் பிட்ச்சில் ஓரளவு தட்டையாக மாறக்கூடும் என்பதால், சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கியப் பங்கு வகிக்கக்கூடும். வானிலையும் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக அமையலாம். டாஸ் வெல்லும் கேப்டன், பிட்ச் மற்றும் வானிலையைப் பொறுத்து முதலில் பந்துவீச முடிவு செய்யலாம்.

வானிலை எப்படி இருக்கும்?

2026 நவம்பர் 19ம் தேதியான நாளை வெலிங்டனில் மழை பெய்ய 10 சதவீத வாய்ப்புள்ளது. மணிக்கு 23 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான வருகின்ற 2026 நவம்பர் 20ம் தேதி மழை எதிர்பார்க்கப்படவில்லை, ஆனால் பலத்த காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. 3ம் நாளான வருகின்ற 2026 நவம்பர் 21ம் தேதி மழை பெய்ய 25 சதவீத வாய்ப்புள்ளது. அதேபோல், வருகின்ற 2026 நவம்பர் 22ம் தேதியும் வானிலை சனிக்கிழமையைப் போலவே இருக்கும். முதல் டெஸ்டின் 5வது மற்றும் கடைசி நாளில் மழை பெய்ய 20 சதவீத வாய்ப்புள்ளது. இதன் பொருள், 5 நாட்களிலும் மழை எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மழையின் காரணமாக பல செசன்கள் தடைபடக்கூடும்.

ALSO READ: 58 ஆண்டுகள் வெற்றிக்காக காத்திருக்கும் இந்தியா..? தோல்விக்கு முற்றுப்புள்ளி..?

இந்திய டெஸ்ட் அணி

சுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், தேவ்தத் பாடிக்கல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன், அன்ஷுல் கம்போஜ், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), நிதீஷ் குமார் ரெட்டி, குர்னூர் பிரார், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா.

நியூசிலாந்து டெஸ்ட் அணி

டாம் லாதம் (கேப்டன்), டெவோன் கான்வே, டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், ஜேக்கப் டஃபி, மாட் ஹென்றி, வில் யங், டாம் பிளண்டல் (விக்கெட் கீப்பர்), கைல் ஜேமிசன், கிளென் பிலிப்ஸ், பிளேயர் டிக்னர், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், ரச்சின் ரவீந்திரா, நாதன் ஸ்மித்.

Follow Us