அண்டை நாடுகளில் பரவு போலியோ.. 6 மாவட்டங்களில் சொட்டு மருந்து முகாம்கள்!
Special Polio Drive In Tamil Nadu | தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 22, 2026) மொத்தம் சுமார் 6 ஆயிரம் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம்கள் நடைபெற உள்ளன.
சென்னை, நவம்பர் 22 : தமிழகத்தில் (Tamil Nadu) உள்ள 6 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 22, 2026) சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் (Special Polio Drop Scam) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அண்டை நாடுகளில் போலியோ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த போலியோ சொட்டு மருத்து முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் எந்த எந்த மாவட்டங்களில் போலியோ சொட்டு மருத்து முகாம்கள் நடத்தப்பட உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அண்டை மாநிலங்களில் தீவிரமாக பரவு போலியோ பாதிப்பு
இந்தியாவின் அண்டை நாடுகளில் போலியோ வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால், இந்திய போலியோ நிபுணர் ஆலோசனை குழு நாடு முழுவதும் ஆய்வு மேற்கொண்டு 21 மாநிலங்களில் உள்ள சுமார் 272 மாவட்டங்களில் போலியோ பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : செஞ்சி சிறுமி விவகாரம்.. இரவு முழுவதும் எரிந்த செங்கல் சூளை.. மீண்டும் திரும்பிய சிபிசிஐடி பார்வை!
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருத்து முகாம்
அந்த வகையில், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருத்து முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தின் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த 6 மாவட்டங்களில் இன்று போலியோ சொட்டு மருத்து முகாம்கள் நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் தொடங்கிய இந்த முகாம்கள், மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன.
இதையும் படிங்க : 195 நாட்களில் ரூ.1.14 லட்சம் கோடி முதலீடுகள் – 1.32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – தமிழக அரசு தகவல்
6 ஆயிரத்து 647 போலியோ சொட்டு மருந்து முகாம்கள்
இந்த 6 மாவட்டங்களில் மொத்தம் சுமார் 6 ஆயிரத்து 647 போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 9 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. குழந்தைகளிடம் போலியோ பாதிப்பு பரவலாக காணப்பட்ட நிலையில், இந்த போலியோ சொட்டு மருத்து வழங்கும் வழக்கம் தொடங்கப்பட்டது. அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வருகிறது.
தற்போது இந்தியாவின் அண்டை நாடுகளில் போலியோ வைரஸ் பாதிப்பு சற்று அதிகமாக உள்ள நிலையில், போலியோ பாதிப்புகள் ஏற்படாமால் தவிர்க்க இந்த போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.