AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இளம் பெண்களிடம் அத்துமீறல்.. இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

Drunk Man Assaults Women, Public Retaliates | புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நின்றுக்கொண்டு இருந்த இரண்டு பெண்களிடம் மது போதையில் இருந்த இளைஞர் ஒருவர் அத்துமீறி நடந்துள்ளார். அதனால், இளம் பெண்கள் கத்தி கூச்சலிட்ட நிலையில், அவரை பொதுமக்கள் கடுமையாக தாக்கினர்.

இளம் பெண்களிடம் அத்துமீறல்.. இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!
தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 22 Nov 2026 08:03 AM IST

புதுக்கோட்டை, நவம்பர் 22 : புதுக்கோட்டையில் (Pudukkottai) பேருந்து நிலையத்தில் நின்றுக்கொண்டு இருந்த இரண்டு இளம் பெண்களிடம் மது போதையில் இருந்த இளைஞர்கள் அத்துமீறி தவறாக நடக்க முயற்சி செய்த நிலையில், அந்த பெண்கள் கத்தி கூச்சலிட்ட நிலையில், அந்த இளைஞரை அங்கிருந்த பொதுமக்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இளம் பெண்களிடம் அத்துமீறிய போதை நபர்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் காமராஜபுரத்தை சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் நின்றுக்கொண்டு இருந்துள்ளனர். அவர்கள் தங்களது ஊருக்கு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்துள்ளனர். அப்போது, அங்கு நல்ல மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் அந்த இளம் பெண்களிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனால், அந்த இளம் பெண்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர்.

இதையும் படிங்க : பெண்கள் பாதுகாப்பில் வாய்கிழிய வசனம் பேசிய விஜய்! தரங்கெட்ட தவெக ஆட்சியில் மோசமான நிலையில் தமிழகம்.. தூத்துக்குடி சம்பவத்தில் கனிமொழி விளாசல்!

சீண்டல் : இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

பெண்களின் கூச்சல் சத்தத்தை கேட்ட அங்கிருந்த பொதுமக்கள் அந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். அப்போது அந்த இளைஞர், அந்த இரண்டு பெண்களில் ஒரு பெண்ணை தவறாக பேசியதால் அந்த பெண் அவரை மிக கடுமையாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இளம் பெண்களிடம் அத்துமீறி, தவறாக பேசிய நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

போதை ஆசாமியிடம் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார்

அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : அழுத்தம் தாங்காமல் வெடித்த பெட்ரோல் டேங்க் மூடி – ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி

பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் பொதுமக்கள்

பள்ளி, கல்லூரிகள் முதல் பேருந்து நிலையம், கடைகள் என பெருன்பாலான இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் சீண்டல்கள் நடைபெற்று வருகிறது. இதனால், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், பேருந்து நிலையத்தில் இளம் பெண்களுக்கு மது போதையில் இருந்தவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us