AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மறைவு…. திருச்சியில் முதல்வர் விஜய்யின் நிகழ்ச்சி ரத்து

CM Vijay Events Cancelled : கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு நவம்பர் 19, 2026 இன்று உடல் நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில் அவரது மறைவையொட்டி திருச்சியில் நவம்பர் 20 நாளை முதல்வர் விஜய் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மறைவு…. திருச்சியில் முதல்வர் விஜய்யின் நிகழ்ச்சி ரத்து
மறைந்த கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவுடன் முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 19 Nov 2026 18:06 PM IST

சென்னை, நவம்பர் 19 : கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு நவம்பர் 19, 2026 இன்று உடல் நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில் அவரது மறைவையொட்டி முதல்வர் விஜய்யின் (CM Joseph Vijay) நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் நவம்பர் 20, 2026 நாளை நடைபெறுவதாக திருச்சி அரசு மருத்துவமனை கட்டிட திறப்பு விழா உள்ளிட்ட முதல்வரின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் முதல்வர் விஜய்யின் நிகழ்ச்சி ரத்து

இது தொடர்பாக தவெக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நவம்ரக் 20, 2026 இன்று காலமானார். இதனையடுத்து, இன்று முதல் 7 நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை முதலமைச்சரின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கரையைக் கடக்கும் அக்வான் புயல்.. அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை? – வானிலை மையம் அப்டேட்!

கடந்த செப்டம்பர் 9, 2026 அன்று கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அமைச்சர்கள் அடுத்தடுத்த நாட்களில் நேரில் நலம் விசாரித்தனர். இதனையடுத்து கடந்த செப்டம்பர் 23, 2026 அன்று முதலமைச்சர் விஜய் மருத்துவமனைக்கு நேரில் சென்று வி.எஸ்.பாபுவைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

தவெக வெளியிட்ட அறிவிப்பு

 

இதனிடையே வி.எஸ்.பாபு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும், அதிகாரப்பூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் எனவும் அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்தார். இந்த நிலையில் கொளத்தூர் வி.எஸ்.பாபுவின் உடல்நிலைக் குறித்து தகவல்களை வெளியிடக் கோரியும், தொகுதிப் பணிகளைக் கவனிக்கவும் வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் அவர் நவம்பர் 19, 2026 இன்று மாரடைப்பால் காலமானதாக மருத்துவமனை அறிவித்தது.

காலியாக உள்ள தொகுதிகள் 6ஆக உயர்வு

இந்த நிலையில் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானதை தொடர்ந்து தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர், திருச்சி கிழக்கு தொகுதிகளை தொடர்ந்து கொளத்தூர் தொகுதியும் காலியானது. அதிமுக எம்.எல்.ஏக்கள் 6 பேர் பதவி விலகியதாலும், முதல்வர் வென்ற திருச்சி கிழக்கும் சேர்த்து 7 தொகுதிகள் காலியாக இருந்தநிலையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது.

இதையும் படிக்க : கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி. எஸ். பாபு காலமானார்!

இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் தவெக வென்றது. இதனையடுத்து இடைத்தேர்தலுக்கு பிறகு காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 5 என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு காலமானதைத் தொடர்ந்து தவெக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 109ல் இருந்து 108ஆக குறைந்துள்ளது.

Follow Us