AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

புது ஆடையை ஆசையுடன் அணிவதற்கு முன் இதை மறந்துடாதீங்க!

Washing New Clothes: புதிய ஆடைகளை அணிவதற்கு முன்பு ஒருமுறை துவைப்பது அவசியம், ஏனெனில் அவற்றில் தூசி, அழுக்கு மற்றும் உற்பத்தியின்போது பயன்படுத்தப்படும் ரசாயன எச்சங்கள் இருக்கலாம். இவை சருமத்தில் அரிப்பு, எரிச்சல் மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும் என்பதால் குழந்தைகளின் ஆடைகளையும் துவைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

புது ஆடையை ஆசையுடன் அணிவதற்கு முன் இதை மறந்துடாதீங்க!
ஆடை Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 03 Nov 2026 13:30 PM IST

புதிய ஆடைகளை வாங்கியவுடன் அவற்றை உடனடியாக அணிய வேண்டும் (New Dress) என்ற ஆர்வம் பலருக்கும் இருக்கும். ஆனால், கடைகளில் வாங்கும் புத்தம் புதிய ஆடைகளைக்கூட ஒருமுறை துவைத்த பிறகே அணிவது நல்லது. ஏனெனில், ஆடைகள் தயாரிக்கப்படுவது முதல் கடைகளுக்கு வந்து சேருவது வரை பல்வேறு செயல்முறைகளைக் கடந்து வருகின்றன. இந்தப் பயணத்தில் துணிகளில் தூசி, அழுக்கு மற்றும் சில ரசாயனப் பொருட்கள் படிந்திருக்க வாய்ப்புள்ளது. இந்தப் பயணத்தில் துணிகளில் தூசி, அழுக்கு மற்றும் சில ரசாயனப் பொருட்கள் படிந்திருக்க வாய்ப்புள்ளது.

Also Read: உயரம் கம்மியா? உங்களை ‘டால் அண்ட் ஸ்டைலிஷ்’ ஆக்கும் டிரஸ்ஸிங்!

ரசாயனப் பாதிப்புகள்

ஆடைகள் சுருங்காமல் இருப்பதற்கும், சுருக்கங்கள் ஏற்படாமல் இருப்பதற்கும் உற்பத்தியின்போது சில ரசாயனப் பூச்சுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை சிலருக்கு சருமத்தில் அரிப்பு, எரிச்சல் மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். எனவே, புதிய ஆடைகளை அணிவதற்கு முன்பு துவைப்பது இத்தகைய பாதிப்புகளைக் குறைக்க உதவும்.

ஒவ்வாமை அபாயம்

புதிய ஆடைகளில் பயன்படுத்தப்படும் சாயங்கள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் உணர்திறன் அதிகம் கொண்ட சருமம் உள்ளவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இதனால் சருமத்தில் சிவந்த தடிப்புகள், அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. முதல் முறையாக ஆடைகளைத் துவைத்துப் பயன்படுத்துவது இத்தகைய பாதிப்புகளைக் குறைக்க உதவும்.

குழந்தைகளின் பாதுகாப்பு

குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானது என்பதால் எளிதில் எரிச்சலுக்கு உள்ளாகலாம். புதிய ஆடைகளில் இருக்கும் சாயங்கள் மற்றும் உற்பத்தி எச்சங்கள் குழந்தைகளின் சருமத்தில் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, குழந்தைகளுக்குப் புதிய ஆடைகளை அணிவிப்பதற்கு முன்பு கட்டாயம் துவைத்துப் பயன்படுத்துவது நல்லது.

சுகாதாரப் பராமரிப்பு

கடைகளில் ஆடைகளை வாங்குவதற்கு முன்பு பலரும் அவற்றை அணிந்து பார்த்திருக்கலாம். இதனால் மற்றவர்களின் உடலில் இருந்து வெளியேறும் அழுக்குகள் மற்றும் சில நுண்ணுயிரிகள் துணிகளில் படிய வாய்ப்புள்ளது. மேலும், கிடங்குகளில் சேமித்து வைப்பது மற்றும் போக்குவரத்தின்போது ஏற்படும் தூசுகளும் ஆடைகளில் படியலாம். இவற்றை அகற்றுவதற்கு முதல் முறை துவைப்பது உதவியாக இருக்கும்.

Also Read: உயரம் கம்மியா? உங்களை ‘டால் அண்ட் ஸ்டைலிஷ்’ ஆக்கும் டிரஸ்ஸிங்!

துவைக்கும் முறை

கருப்பு, சிவப்பு, அடர் நீலம் போன்ற நிற ஆடைகளில் முதல் முறை துவைக்கும்போது சாயம் வெளியேற வாய்ப்புள்ளது. எனவே, அவற்றை மற்ற ஆடைகளுடன் சேர்த்துத் துவைக்காமல் தனித்தனியாகத் துவைப்பது நல்லது. துணியின் வகைக்கு ஏற்ற சலவைத்தூளைப் பயன்படுத்தி, ஆடைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பராமரிப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். உப்பு அல்லது வினிகர் சேர்த்தால் மட்டுமே ரசாயனங்கள் முழுமையாக நீங்கும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us