சுற்றுலாப் பிரியர்களுக்கு குட் நியூஸ்: இனி கடல் வழியில் ஜாலி பயணம்!
Chennai Puducherry Ferry Service: சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சென்னை, மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி இடையே புதிய பயணிகள் படகுப் போக்குவரத்தைத் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக 50 பயணிகள் பயணிக்கும் அதிவேகப் படகுகளை இயக்கக்கூடிய தகுதியான நிறுவனங்களிடம் இருந்து விருப்பக் கோரிக்கை ஆவணங்களை தமிழ்நாடு கடல்சார் வாரியம் வரவேற்றுள்ளது.
தமிழ்நாடு கடல்சார் வாரியம் (Tamil Nadu Maritime Board) சார்பில் சென்னை, மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி இடையே புதிய கடல்வழி பயணிகள் படகுப் போக்குவரத்தை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், பயணிகளுக்குப் புதிய அனுபவத்தை வழங்கவும் இந்த அதிவேகப் படகு சேவை கொண்டு வரப்படுகிறது. இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அனுபவம் வாய்ந்த தனியார்துறை நிறுவனங்களிடம் இருந்து விருப்பக் கோரிக்கை ஆவணங்கள் (EOI) வரவேற்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் 50 பயணிகள் பயணிக்கும் வகையிலான அதிவேகப் படகுகளை இயக்கிய அனுபவம் உள்ள நிறுவனங்கள் மட்டுமே இத்திட்டத்தில் பங்கேற்கத் தகுதியானவை ஆகும். ஏலத்திற்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் மற்றும் விண்ணப்பப் பதிவுக்கான காலக்கெடு தொடர்பான விவரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. விருப்பமுள்ள நிறுவனங்கள் தங்களது விரிவான முன்மொழிவுகளை அரசின் மின்-ஒப்பந்தப் பதிவேற்றத் தளம் வழியாகவே சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Also Read: அலைகளுக்கு மத்தியில் அலாதியான பயணம்.. தமிழக அரசின் அசத்தல் திட்டம்!
புதிய கடல் வழிப் பயணம்
தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் சென்னை, மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி ஆகிய கடலோரப் பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய பயணிகள் படகுப் போக்குவரத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தற்பொழுது சாலை மார்க்கமாக மட்டுமே மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு மாற்றாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கடல்வழி அனுபவத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த ஒருங்கிணைந்த சுற்றுலாத் திட்டம் வடிவம் பெற்றுள்ளது.
தகுதி மற்றும் விருப்ப வெளிப்பாடு
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திடத் திறமையும் அனுபவமும் வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து தமிழ்நாடு கடல்சார் வாரியம் விருப்பக் கோரிக்கை ஆவணங்களை (EOI) வரவேற்றுள்ளது. இதன்படி குறைந்தபட்சம் 50 பயணிகள் பயணிக்கக் கூடிய அதிவேகப் படகுகளை இயக்கிய அனுபவமும், சொந்தமாகவோ அல்லது நீண்டகால குத்தகையின் அடிப்படையிலோ படகுகளைப் பராமரிக்கும் வசதியும் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே இதில் கலந்துகொள்ளத் தகுதியுடையவர்கள் ஆவர்.
Also Read: அலைகளுக்கு மத்தியில் அலாதியான பயணம்.. தமிழக அரசின் அசத்தல் திட்டம்!
விண்ணப்பிக்கும் முறைகள்
விருப்பமுள்ள நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகச் சமர்ப்பிக்கலாம் என்றும், இது தொடர்பான ஏலத்திற்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் மற்றும் இணையதளம் வாயிலான விண்ணப்பப் பதிவுக்குரிய காலக்கெடுவும் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்துள்ள விதிகளுக்கு உட்பட்டு, தகுதியான நிறுவனங்கள் தங்களது ஆவணங்களை அதிகாரப்பூர்வ மின்-ஒப்பந்தப் பதிவேற்றத் தளத்தின் வழியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.