AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முரசு புயலால் கொட்டிய மழை.. நவம்பர் 6, 7-ல் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அப்டேட்

Rainfall Alert: சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், இன்று பகல் நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

முரசு புயலால் கொட்டிய மழை.. நவம்பர் 6, 7-ல் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அப்டேட்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 03 Nov 2026 06:25 AM IST

நவம்பர் 3, 2026: வங்கக்கடலில் உருவான தீவிரப் புயலான முரசு, நவம்பர் 3-ஆம் தேதியான இன்று ஆந்திர மாநிலம் நெல்லூர் – நரசாபூர் இடையே கரையைக் கடக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், வரும் நவம்பர் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழகத்தில் கொட்டிய மழை!

முரசு புயலின் தாக்கத்தால் வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பதிவானது. அதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் அவ்வப்போது கனமழையும் மிதமான மழையும் பெய்தது. இதனால் வடகடலோர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரித்தது.

மேலும் படிக்க: மாணவர்களுக்கு மொட்டை அடித்தாலும் தவறில்லை! அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பேச்சால் சர்ச்சை – சமூக வலைதளங்களில் கண்டனம்!

இந்நிலையில், இன்று நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழையும், ஏனைய தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 6, 7-ல் கனமழை எச்சரிக்கை!

நவம்பர் 4-ஆம் தேதி உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். நவம்பர் 5-ஆம் தேதி தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதர தென் தமிழக மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க: சென்னை டூ புதுச்சேரிக்கு கப்பல் போக்குவரத்து.. அலைகளுக்கு மத்தியில் அலாதியான பயணம்.. தமிழக அரசின் அசத்தல் திட்டம்!

நவம்பர் 6-ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், இதர தென் தமிழக மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 7-ஆம் தேதி ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 15 வரை புதிய புயலுக்கு வாய்ப்பில்லை!

இதற்கிடையே, நவம்பர் 15-ஆம் தேதி வரை வங்கக்கடலில் மற்றொரு புயல் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் தமிழகத்தில் மீண்டும் மழைப்பொழிவு படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் இன்று வானிலை எப்படி?

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், இன்று பகல் நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us