Sundar C: சினிமாவில் 30 வருடத்தை நிறைவு செய்த இயக்குநர் சுந்தர்.சி!
30 Years Of Sundar C : தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் கலக்கிவருபவர் சுந்தர் சி. இவர் சினிமாவில் பிரபல நடிகர்களுடன் இணைந்து பல படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த சுந்தர் சி, சினிமாவில் அறிமுகமாகி 30 வருடத்தை கடந்துள்ளார். இது குறித்து மூக்குத்தி அம்மன் 2 படக்குழு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இயக்குநர் சுந்தர் சியின் (Sundar C) படங்கள் என்றாலே காமெடி மற்றும் ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது. அப்படிப்பட்ட பல ஹிட் படங்களை இயக்கி உள்ளார். ஆரம்பத்தில் சினிமாவில் சில படங்களில் சிறப்புக் கதாபாத்திரம் போல கேமிரா ரோல்களில் நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து , கடந்த 1995ம் ஆண்டு வெளியான முறை மாமன் (Murai Maaman) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர்கள் ஜெயராம் (Jayaram) மற்றும் குஷ்பு (Kushbhu) இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் ஹிட்டானதைத் தொடர்ந்து முறை மாப்பிள்ளை, உள்ளதை அள்ளித்தா, மேட்டுக்குடி , ரஜினிகாந்த்தின் அருணாச்சலம், உன்னைத் தேடி போன்ற படங்களை இயக்கியுள்ளார். சூப்பர் ஸ்டார் (Super Star) முதல் கமல்ஹாசன் (Kamal Hasan) வரை பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். இதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராகவே திகழ்ந்தார்.
மேலும் இயக்குநராக படங்களை இயங்கிவந்த இவர், கடந்த 2006ம் ஆண்டு வெளியான தலை நகரம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தில் நடித்து மிகுந்த பிரபலத்தைப் பெற்றார். கடந்த 1995ம் ஆண்டு முதல் சினிமாவில் பிரபல இயக்குநர், நடிகராக இருந்த சுந்தர் சி, சினிமாவில் தனது 30 வருடத்தைக் கடந்துள்ளார். இதைக் கொண்டாடும் வகையில் மூக்குத்தி அம்மன் 2 (Mookuthi Amman 2) படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மூக்குத்தி அம்மன் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :
30 Years. Endless Blockbusters. One Iconic Vision.
Celebrating the incredible journey of #SundarC Sir 🔥 with love from the team of #MookuthiAmman2@IshariKGanesh @VelsFilmIntl #Nayanthara @hiphoptamizha@ReginaCassandra @iYogiBabu@OfficialViji @mgabhinaya@AvniCinemax_… pic.twitter.com/tPSUkuSniX— Vels Film International (@VelsFilmIntl) May 19, 2025
இயக்குநர் சுந்தர் சியின் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் கேங்கர்ஸ். இந்த படத்தில் நடிகர் வடிவேலுவுடன் நடிகர் சுந்தர் சியும் முக்கிய நாயகனாக நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025, ஏப்ரல் 24ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படமானது ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில், அதைத் தொடர்ந்து தற்போது அமேசான் ஓடிடியில் வெளியாகி வருகிறது.
இந்த படத்தைத் தொடர்ந்து நடிகை நயன்தாராவின் முன்னணி நடிப்பில் மூக்குத்தி மான் 2படத்தை இயக்கி வருகிறார். மேலும் இதில் முக்கிய ரோலிலும் நடித்து வருகிறார். இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் கடந்த 2020 ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி, மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கிவருகிறார். இந்த படம் 2025ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.