AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs AFG: ஐபிஎல் 2026க்கு பிறகு! ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடும் இந்தியா.. பிசிசிஐ அட்டவணை வெளியீடு!

IND vs AFG ODI Series: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி இதுவரை ஒரு ஒருநாள் தொடரில் கூட விளையாடியது கிடையாது. எனவே, இந்த தொடரை காண இருநாட்டு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த சுற்றுப்பயணம் ஜூன் 2026 இல் நடைபெறும், இதில் இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் (ODI) அடங்கும்.

IND vs AFG: ஐபிஎல் 2026க்கு பிறகு! ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடும் இந்தியா.. பிசிசிஐ அட்டவணை வெளியீடு!
இந்தியா - ஆப்கானிஸ்தான்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 02 Mar 2026 14:56 PM IST

2026 டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) விரைவில் முடிவடைய இருக்கிறது. இதனை தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் 2026 சீசன் இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. ஐபிஎல் முடிந்த கையோடு இந்திய வீரர்கள் எப்போது, யாருடன் விளையாடுவார்கள் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐபிஎல் 2026க்கு (IPL 2026) பிறகு, இந்திய அணி ஒரு டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடவுள்ளது. இந்த தொடரானது வருகின்ற 2026ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.

ALSO READ: அரையிறுதியில் இந்திய அணி.. டி20 உலகக் கோப்பையில் வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டி தொடர்:

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி இதுவரை ஒரு ஒருநாள் தொடரில் கூட விளையாடியது கிடையாது. எனவே, இந்த தொடரை காண இருநாட்டு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த சுற்றுப்பயணம் ஜூன் 2026 இல் நடைபெறும், இதில் இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் (ODI) அடங்கும். இரு அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியானது வருகின்ற 2026 ஜூன் 6 – 10 வரை நியூ சண்டிகரில் நடைபெறவுள்ளது.

ஒருநாள் தொடர் எப்போது..?

வருகின்ற 2026 ஜூன் 14ம் தேதி முதல் இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் சர்வதேச ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இதற்கு முன்பு, இரு அணிகளும் ஐசிசி நடத்திய போட்டிகளிலும், ஆசிய கோப்பைகளிலும் மட்டுமே ஒருநாள் வடிவத்தில் விளையாடியுள்ளன. இந்த போட்டிகள் தர்மசாலா, லக்னோ மற்றும் சென்னையில் நடைபெறும். இந்த தொடரானது 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ரோஹித் – விராட் கோலி மீண்டும் களம்:

2027 ஒருநாள் உலகக் கோப்பையில் தயாராகும் வகையில் இந்திய அணியின் ஜாம்பவான்களான விராட் கோலி, ரோஹித் சர்மா களமிறங்குவார்கள். இது இந்திய ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை தரும். ஐபிஎல் 2026க்குப் பிறகு அணித் தேர்வு எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: அதே ஸ்கோர்.. 10 ஆண்டுகால வலி.. இந்தியா – மேற்கிந்திய தீவுகள் போட்டியில் இப்படி ஒரு விஷயமா?

இந்தியா-ஆப்கானிஸ்தான் தொடர் அட்டவணை:

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

  • ஒரே ஒரு டெஸ்ட்: 2026 ஜூன் 6 முதல் ஜூன் 10 வரை – சண்டிகர்
  • முதல் ஒருநாள் போட்டி: 2026 ஜூன் 14 தர்மசாலா
  • இரண்டாவது ஒருநாள் போட்டி: 2026 ஜூன் 17 – லக்னோ
  • மூன்றாவது ஒருநாள் போட்டி: 2026 ஜூன் 20 – சென்னை

Follow Us