AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs WI: அரையிறுதியில் இந்திய அணி.. டி20 உலகக் கோப்பையில் வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!

2026 டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி 196 ரன்கள் இலக்கை எட்டி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணிக்காக கடைசி வரை போராடிய சஞ்சு சாம்சன் 97 ரன்கள் குவித்து வெற்றியை தேடி கொடுத்தார்.

IND vs WI: அரையிறுதியில் இந்திய அணி.. டி20 உலகக் கோப்பையில் வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
சஞ்சு சாம்சன்Image Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 01 Mar 2026 23:18 PM IST

2026 டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி 196 ரன்கள் இலக்கை எட்டி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணிக்காக (Indian Cricket Team) கடைசி வரை போராடிய சஞ்சு சாம்சன் 97 ரன்கள் குவித்து வெற்றியை தேடி கொடுத்தார். இது டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் அதிகபட்ச சேஸிங் ஆகும். இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்குப் பிறகு, அரையிறுதிக்கு முன்னேறிய நான்காவது மற்றும் கடைசி அணியாக இந்திய அணி மாறியது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் நடந்த டி20 போட்டிகளில் அதிக ரன் சேஸிங் மூலம் அதிக ரன்கள் குவித்த உலக சாதனையையும் இந்திய அணி படைத்தது.

195 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் அணி:

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. வெற்றி பெற்றால்தான் அரையிறுதி என்ற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணொ 4 பந்துகள் மீதமுள்ள நிலையில் இந்த இலக்கை அடைந்தது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுவது இது ஆறாவது முறையாகும்.

ALSO READ: 196 ரன்கள் இலக்கு.. இந்திய அணி 12 ஆண்டுகால சாதனையை முறியடிக்குமா? புள்ளி விவரங்கள்!

சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளிக்க, ​​சஞ்சு சாம்சன் இந்திய அணிக்காக பொறுப்பேற்றுக் கொண்டு 50 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 97 ரன்கள் எடுத்து வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸை விளையாடினார்.

மிகப்பெரிய சேஸிங்:


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா 196 ரன்கள் இலக்கை எட்டி, ஈடன் கார்டனில் அதிகபட்ச ரன் சேசிங் சாதனையை படைத்தது. முன்னதாக, கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடந்த அதிகபட்ச டி20 ரன் சேசிங் 158 ரன்கள் ஆகும். அதுவும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணியே அடித்தது.

கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா மற்றும் திலக் வர்மா ஆகியோர் சில பந்துகளை எதிர்கொண்டு அதிரடியாக விளையாட, இந்தியாவின் வெற்றிக்கு உதவியாக அது அமைந்தது. ஆனால் தொடக்கத்திலிருந்து இறுதி வரை களத்தில் நிலைத்திருந்த ஒரே வீரர் சஞ்சு சாம்சன் மட்டுமே.

ALSO READ: ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள்.. உலக சாதனை படைத்த ஹெட்மையர்!

சிவம் துபேயின் முக்கிய 2 பவுண்டரிகள்:

கடைசி 2 ஓவர்களில் இந்தியாவுக்கு 17 ரன்கள் தேவை என்ற நிலையில், 19வது ஓவரின் 2வது பந்தில் ஹர்திக் பாண்ட்யா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இது இந்திய ரசிகர்களுக்கு பயத்தை கொடுத்தது. அடுத்து உள்ளே வந்த ஷிவம் துபே 3 பந்துகளில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார். இந்த பவுண்டரிகள் சஞ்சு சாம்சன் மீதான அழுத்தத்தைக் குறைத்தது மட்டுமல்லாமல், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடியை கொடுத்தது. அதன்பிறகு, 20வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸரும், 2 வது பந்தில் பவுண்டரியும் அடித்து சஞ்சு சாம்சன் 97 ரன்களுடன் ஹீரோவானார்.

Follow Us