பெங்களூரில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வசிக்கும் ஒரு தொழில்நுட்ப நிபுணர், தனது வீட்டுக் கிச்சனில் ஏஐ தொழில்நுட்பம் கொண்ட கண்காணிப்பு அமைப்பை நிறுவியிருந்தார். இந்த அமைப்பை அவர் நகைச்சுவையாக ஏஐ ரூம் மேட் என்று அழைத்துள்ளார். அவருக்கு தனது வீட்டில் வேலை செய்யும் பணியாளர் ஃப்ரிட்ஜில் இருந்து பொருட்களை எடுத்து வருவதாக சந்தேகம் ஏற்பட்டதால் இந்த அமைப்பை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.