IND W vs SA W Final : பைனலில் இந்தியா – தென்னாப்பிரிக்கா.. மழையால் போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?
World Cup Rain Alert : ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. போட்டி நடைபெறும் அன்று மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவை (Australia) வீழ்த்திய உற்சாகத்தோடு, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தனது முதல் உலகக் கோப்பை பட்டத்தை வெல்லும் முனைப்பில் தயாராகி வருகிறது. இந்த நிலையில் நவம்பர் 2, 2025 அன்று மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் மழை பெய்யுமா என்ற கவலை ரசிகர்களை சூழ்ந்துள்ளது. காரணம், இந்திய வானிலை ஆய்வு மையம் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) விடுத்துள்ளது. இதனால் மும்பை மற்றும் நவி மும்பை பகுதிகளில், லேசானதுமுதல் மிதமான மழை, இடியுடன் கூடிய மின்னல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது மழை குறுக்கிட்டால் ஆட்டம் ரத்தாக வாய்ப்பிருப்பதால் ரிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
கனமழைக்கு வாய்ப்பு
இந்தியா வானிலை ஆய்வு மையம் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. அதன்படி சனிக்கிழமை 86 சதவிகிதமும், ஞாயிற்றுக்கிழமை 63 சதவிகிதமும் மழை பெய்யக் கூடும் என கணித்துள்ளது. குறிப்பாக போட்டி நடைபெறும் நவி மும்பை பகுதியில், வருகிற நவம்பர் 2, 2025 அன்று மழை பெய்வதற்கா சாத்தியம்50 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டி.ஒய் படில் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டி பாதிக்கப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. முன்னதாக இதே மைதானத்தில் இந்தியா – வங்க தேசம் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள்.. நாக் அவுட்டில் நங்கூர ரன் சேஸ்.. இந்திய மகளிர் குவித்த சாதனைகள்!




போட்டி ரத்தானால் என்ன ஆகும்?
இறுதிப் போட்டி நாளான நவம்பர் 2, 2025 ஞாயிற்றுக்கிழமை மழையால் ஆட்டம் முடியாவிட்டால், அதற்கு அடுத்த நாள் நவம்பர் 3, 2025 அன்று திங்கட்கிழமை போட்டி நடைபெறும். ஆனால் இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், அன்று கூட 55 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அன்றும் போட்டி நடைபெறவில்லை என்றால் போட்டி முடிவின்றி ரத்து செய்யப்படும். இது ரசிகர்களிடையே கவலையை அதிகரித்திதருக்கிறது.
இதையும் படிக்க : இது வெற்றியின் கண்ணீர்.. தந்தையை கட்டிப்பிடித்த கலங்கிய ஜெமிமா!
கபில் தேவின் இன்னிங்க்ஸை ஆடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ்
அதேசமயம், இந்திய அணியின் சமீபத்திய அரையிறுதிப் போட்டியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் கொடுத்த அதிரடி இன்னிங்ஸ் இன்னும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 134 பந்துகள் எதிர்கொண்டு 127 ரன்கள் அடித்து, இந்தியாவை உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிகப்பெரிய ரன் சேஸ் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். அவரது ஆட்டம் கடந்த 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது கபில் தேவின் இன்னிங்க்ஸை நினைவுபடுத்தியது. இந்த ஆட்டத்தில் இந்தியா 59 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அப்போது ஜெமிமா, ஹர்மன்ப்ரீத் கௌர் ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்டு வெற்றிக்கு காரணமாக அமைந்தனர்.