Sanju Samson: சாம்சனை சிஎஸ்கே கேப்டனாக தோனி மாற்றுவாரா? ஒப்பந்தம் குறித்த முக்கிய அப்டேட்!
Chennai Super Kings: சஞ்சு சாம்சன் 149 இன்னிங்ஸ்களில் 26 அரைசதங்கள் மற்றும் 2 சதங்களுடன் 4,200 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டில் ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியபோது, சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டு அணிக்கு நிலையான தலைமையை வழங்கி வருகிறார்.
ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்னதாக எந்த அணி யாரை விடுவிக்கும், யாரை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் நிலவி வருகிறது. கடந்த சில மாதங்களாக ஐபிஎல் (IPL) குறித்தான செய்தியில் அதிகம் இடம் பெற்ற பெயர் சஞ்சு சாம்சன். இவர் மீதே அனைத்து ஐபிஎல் அணிகளும் கவனம் செலுத்தி வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன், அந்த அணியை விட்டு வெளியேறக்கூடும் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை தொடர்ந்து, சாம்சன் (Sanju Samson) சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த விஷயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் இப்போது ஒரு குறிப்பிடத்தக்க அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
மௌனம் கலைத்த சிஎஸ்கே:
கடந்த சில நாட்களாக வருகின்ற ஐபிஎல் 2026 சீசனில் சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சியில் காணப்படலாம் என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. தோனிக்குப் பதிலாக கேப்டன் பதவியை ஏற்க ஒரு இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தேடி வருவதாகவும், சஞ்சு அதற்குப் பொருத்தமானவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




ஆனால் தற்போது, மணி கன்ட்ரோலில் வெளியான ஒரு செய்தியின்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த விவாதங்களை முற்றிலுமாக நிராகரித்துள்ளது. விக்கெட் கீப்பராக புதிய வீரரை வர்த்தகம் செய்வது அல்லது மாற்றுவது குறித்து இதுவரை விவாதிக்கப்படவில்லை என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் பொருள் சஞ்சுவின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மாற்றம் தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ALSO READ: 5 வீரர்களை விடுவிக்க திட்டமிடும் சிஎஸ்கே… இந்த வெளிநாட்டு வீரரும் வெளியேறுகிறாரா..?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான உறவு:
🚨 SANJU SAMSON WILL LEAVE FROM RR. 🚨 [Cricbuzz]
-“Samson himself approached the RR management after the end of the IPL 2025, he wanted to leave the franchise and urged them to either release or trade him”. pic.twitter.com/Ghoez8poJ3
— Danish (@BhttDNSH100) October 30, 2025
சஞ்சு சாம்சனுக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் கிட்டத்தட்ட 12 வருட உறவு உண்டு. கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் சஞ்சு சாம்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போதிருந்து, சஞ்சு அணியின் மிகவும் நம்பகமான முகங்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
சஞ்சு சாம்சன் 149 இன்னிங்ஸ்களில் 26 அரைசதங்கள் மற்றும் 2 சதங்களுடன் 4,200 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டில் ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியபோது, சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டு அணிக்கு நிலையான தலைமையை வழங்கி வருகிறார். இருப்பினும், ஐபிஎல் 2025 முடிந்த பிறகு சாம்சன் அணியை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்தார். அவருக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான உறவு இதுவரை சரியாக இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, சஞ்சு சாம்சன் தன்னை விடுவிக்க வேண்டும் அல்லது வேறு அணிக்கு மாற்ற வேண்டும் என்று தெளிவாக கூறினார்.
ALSO READ: என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் மிஸ் செய்தது இதைதான்.. சூர்யகுமார் யாதவ் வருத்தம்..!
அதேநேரத்தில், சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் 2027 வரை ஒப்பந்தம் செய்துள்ளார். எனவே, அவரை விடுவிப்பது குறித்த முடிவு முழுக்க முழுக்க அணியின் உரிமையாளர் மனோஜ் படேலையே சார்ந்தது. ராஜஸ்தான் அணி விரும்பினால் அவரைத் தக்க வைத்துக் கொள்ளலாம். ஆனால் அணிக்குள் இருக்கும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.